ஓசூர்





	


	



























	




 




	








 




2:17:37 PM         Saturday, May 16, 2026

ஓசூர்

ஓசூர்
ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர் ஓசூர்
Product Code: ஓசூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                        ஓசூர், சந்திர சூடேஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்  கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் இருக்கிறது.  இக்கோவில் தேசிய நெடுஞ்சாலை 7க்கு அருகாமையில் அமைந்துள்ளது. பெங்களுரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் கிருஷ்ணகிரியில் இருந்து 42 கி.மீ தெலைவிலும் அமைந்துள்ளது. அருகாமையில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளது. 

இறைவன் : சந்திர சூடேஸ்வரர்
இறைவி : மரகதம்மாள்
தல தீர்த்தம்  : பச்சைக்குளம்

 

தல சிறப்புகள் :  இக்கோயில் மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இக்கோயில் ஒசூரின் கிழக்கே உள்ள மலையுச்சியில் உள்ளது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3120 அடி உயரத்தில் உள்ள பகோடா மலையின் மேல் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேர்க்கோட்டில் கிழக்கு, மேற்காக திருவேங்கட மலை, ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலை, பிரம்மா மலை என்று சரித்திர புகழ் வாய்ந்த மலைகள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. 

தல வரலாறு : ஒரு காலத்தில் தர்மதேவன் சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். அவரின் தவத்தின் பயனாக காட்சியளித்த சிவனிடம் தன்னை சிவனின் வாகனமாக ஏற்றுக்ளொள்ள வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அவரைக் காளையாக மாற்றி வாகனமாக்கிக் கொண்டார். இதனால் மகிழ்ந்த தர்மதேவன் இந்த இடத்தில் தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி அதில் உமையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளுமாறு வேண்டினார். அதன்படி சிவன் இங்கு ரிசப வடிவில் விருஷபாசலம் என்னும் ஒரு மலையை உருவாக்கி அங்கேயே தங்கினார்.

பின்னர் தேவியை இங்கே அழைத்துவர ஒரு திருவிளையாடல் புரியும் விதமாக ஒளிவீசும் உடும்பு வடிவமெடுத்து கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த தேவிக்கு அருகில் வந்தார். இந்த அதிசய உடும்பைக் கண்ட உமை அதைப் பிடிக்க எண்ணி தன் தோழிகளுடன் சென்றார். அந்த மரகத நிற உடும்பு அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டி சென்றது ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலைத் தீண்ட, தேவியின் உடல் பச்சை நிறத்தை அடைந்தது. இதற்கிடையில் தேவியின் தோழிகள் தாகத்தால் தவித்து தண்ணீரைத் தேடி கானகம் முழுவதும் அலைந்தனர் ஆனால் அங்கு ஆறோ குளமோ எதுவும் காணாமல் தவித்தனர். அவர்கள் தேவியை வேண்ட தேவி தன்னுடன் தோன்றிய நதியாகிய அலக்நந்தனை அங்கு ஒரு வாவியை உருவாக்கப் பணித்தாள். அலக்நந்தனால் உருவாக்கப்பட்ட குளத்தில் நீராட தேவி இறங்கியதும் அதில் உள்ள நீரானது பச்சை நிறத்தை அடைந்தது. இதுவே தற்போது பச்சைக்குளம் என்று அழைக்கப்படும் மரகதசரோவரம் ஆகும்.

மீண்டும் தேவியின் கண்களில் அகப்பட்ட அந்த உடும்பானது அருகில் உள்ள மலைமீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி அதைப் பின்தொடர்ந்து அந்த மலைமீது ஏறினாள். அந்த மலை உச்சியில் இருந்த சண்பக மரத்தில் அந்த உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முனிவரான முத்கலன் என்பவரும் அதைப் பார்த்தார். சற்று தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணன் என்பவரைக் கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் அவ்உடும்பை பிடிக்க எத்தனித்தபோது உடும்பு மறைந்தது. உடும்பு மறைந்ததைக் கண்டு தேவி திகைத்தாள் அது மறைய இந்த முனிவர்களே காரணம் என சினந்து, உடும்பைக் கண்டு கூவியவரை ஊமையாகும்படியும், அதைக் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவ்விருவரும் வேட்டுவ குலத்தில் பிறக்கும்படியும் சபித்தாள். அதைக் கேட்ட அந்த முனிவர்கள் தேவியிடம் இறைஞ்சினார்கள். ஆத்திரத்தில் சிவபக்தர்களை சபித்ததர்க்காக வருந்திய தேவி சிவனை நினைத்து வேண்டினாள். அப்போது அங்கு சிவன் உமையின் முன்பு தோன்றினார். இதையடுத்து முனிவர்களும் தேவியும் சிவனை வணங்கி வேண்டினர். அதைத்தொடர்ந்து தர்மதேவனுக்கு தான் அளித்த வாக்கின்படி இங்கு சிலகாலம் தங்கவே உடும்புவடிவில் இங்கு வந்ததாக சிவன் கூறினார். முனிவர்கள் அவரிடம் சாபவிமோசனம் அளிக்குமாறு வேண்டினர். தேவியின் வாக்கு பொய்யாகக்கூடாது. எனவே அவளது வாக்கின்படி இருவரும் வேட்டுவக் குலத்தில் பிறந்து வளர்ந்து வாருங்கள். இம்மலையின் மீது என்னை உடும்புவடிவில் காணும்போது சாபவிமோசனம் பெற்வீர்கள் என அருளினார். இதன் பிறகு அதன்படியே முனிவர்கள் ஒரு வேட்டுவனுக்கு ஊமை மற்றும் செவிடான இரட்டையர்களாக பிறந்து வளர்ந்து இந்த மலைமீது உடும்புவடிவில் உள்ள சிவனைக் கண்டு சாபவிமோசனம் பெற்றனர்.

கயிலையில் இருந்து வரும் பொழுது இறைவன் ஒரு பல்லியின் வடிவம் கொண்டதாகவும் ,அந்த அழகிய பல்லியை பின் தொடர்ந்து வந்த அம்பாள் இந்து மலைக்கு வந்தாதகவும் சொல்லபடுகிறது. மலை மேல் இரு முனிவர்கள் தவம் செய்து வந்தார்கள்.அவர்களின் தவ வலிமையினால் அவர்கள் வந்திருக்கும் பல்லி இறைவன் என்று அறிந்து பல்லியை பிடிக்க முயலுகிறார்கள். அப்பொழுது அந்த பல்லி மறைந்து விடுகிறது .இதை பார்த்து கோபமுற்ற அம்மன் முனிவர்களுக்கு சாபம் அளிக்கிறாள். பின்பு தவம் செய்த அம்மன் முன் இறைவன் தோன்றியதாக தல வரலாறு சொல்கிறது. இன்றும் கோவில் அமைந்திருக்கும் மலை பாறையின் மீது ஒரு பல்லியின் வடிவம் உள்ளதாக சொல்ல படுகிறது. இங்கு ஒரு காளிகாம்பாள் சன்னதி உள்ளது.

கோவில் அமைப்பு : இக்கோயில் எக்காலத்தில் கட்டப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியவில்லை. கோயிலில் உள்ள கணபதிச் சிற்றாலயம் கங்கர்களின் சிற்பக்கூறுகளை கொண்டுள்ளது எனவும், உள் திருச்சுற்றில் உள்ள சப்தமாதர்கள், சூரியன் திருவுருவங்கள் கங்கர்கள் காலத்தவை என்றும் கருதப்படுகிறன. ஒசூர் பகுதியில் கங்கர்களின் 9, 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சோழர்கால கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. கிபி 1261-ல் ஒய்சாலர்கள் ஆட்சி காலத்தில், திரிபுவனமல்ல பூர்வாதிராச அத்தியாழ்வார் மகன் தர்மத்தாழ்வார் இக்கோயிலின் மரகதம்மாள் எழுந்தருளச் செய்தார்.

சோழர்களின் ஆட்சி காலமான கிபி 11, 12-ம் நூற்றாண்டுகளில் இத்தல இறைவன் செவிடநாயனார், உடையார் செவிடநாயனார், செவிடையாண்டார் என அழைக்கப்பட்டார். 13-ம் நூற்றாண்டுவரை இப்பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். 14-ம் நூற்றாண்டில் விசயநகர ஆட்சிகாலத்தில் சூடநாதா எனவும் சூடலிங்கையா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். ஊர் பெயர் செவிடபாடி சூடவாடி என மருவியிருக்கிறது. அதைப் போல செவிடநாயனார் சூடநாதர் சூடநாதேசுவரர் சூடேசுவரர் என்றாகி சந்திர சூடேசுவர் என அழைக்கப்பட்டுவருகிறார். இக்கோயில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், உற்சவர் மண்டபம் என இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் மரகதாம்பிகை சிற்றாலயம், வள்ளி சண்முகர் தெய்வானை, இராச கணபதி, சப்தமாதர் ஆகிய தெய்வங்களுக்குத் தனித்தனியே சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் உள்ளன.

இக்கோவில் திருபுவனமல்லா பர்வதராஜா அந்தியாழ்வார் என்னும் ஹோய்சாலா சாம்ராஜ்ய மன்னரால் கி.பி.1260 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தமிழ் நாட்டு கோவில் கட்டமைப்புகளில் இருந்து இக்கோவில் வேறுபட்டு இருந்தாலும், இதற்கென்றும் தொண்மையான வரலாறு இருக்கிறது. பிரம்மாந்த புராணத்தில், பத்ரகிரி மஹாத்மியம் என்று இக்கோவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஜாம்பவா, வ்ரிஷ்பா, மரகத சரோவரம், பாண்டவா, சிவகங்கை, ஹனுமா தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களுக்கு செல்லும் பக்தகோடிகளும் இக்கோவிலுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். இங்கு சிவபெருமான் தவிற முருகப்பெருமான் மற்றும் விநாயகருக்கும் தனி சன்னதிகள் இருக்கின்றன.

இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது சிறப்பு. இக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவில் போல் அமைந்துள்ளது. இக்கோவில் 11ஆம் நூற்றாண்டு சோழர்கள் கால கல்வெட்டு காணப்படுகிறது. முதலாம் இராஜராஜசோழன், குலோத்துங்கசோழன் ஆகியோரை பற்றிய அரிய தகவல்கள் உள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இத்திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இவ்விழாவினை காண அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்கில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சேலம்

அருகிலுள்ள ரயில் நிலையம் : குப்பம், பாலக்கோடு, திருப்பத்தூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×