மூலனூர், சோழீசுவரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் கரூர் - தாராபுரம் பழனிச் சாலையில் கன்னிவாடி அடுத்து மூலனூரை அடையலாம். கரூரிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும், தாராபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இறைவன் : சோழீசுவரர்
இறைவி : சௌந்தர்யநாயகி
தல விருட்சம் : வில்வம்
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய கோவில் நான்கு புறமும் பெரிய மதில் மற்றும் கதை சிற்பங்களுடன் தோரண வாயில் உள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம், கருவறை மண்டபம் அமைப்பில் உள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம் இரண்டிலும் நந்தி, பலிபீடம் உள்ளது. கருவரையில் லிங்க திருமேனியாக சோழிஸ்வரர் உள்ளார். பிரகாரத்தில் பிரம்மா, தட்சணாமூர்த்தி, விஷ்ணு, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபம் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. நடராச சபை உள்ளது. அம்மன் தனி சன்னதி கொண்டுள்ளார். இறைவன், இறைவி சன்னதிக்கு இடையே வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். விநாயகர், துர்கை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராசர் சிவகாமி, கால பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், நவகிரகங்கள், வேப்பமரமும் அரசமரமும் இணைந்து மரத்தடியில் விநாயகர், நாகர், நந்திபெருமான் ஆகியோர் தலத்தில் உள்ளனர். சன்னதி வாயிலின் அருகில் ஆஞ்சநேயர் உருவமும், மறு பக்கம் யானையின் உருவமும் காணப்படுவது அற்புதம். நர்த்தன விநாயகர், பசுபதியேஸ்வரர் சௌந்திரநாயகி திருருவமும் காணபடுகிறது.
தல வரலாறு : இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். 1200 ஆண்டுகள் இப்பகுதில் வாழ்ந்த மூலன் எனும் முனிவரால் இப்பகுதி மூலன் நகர் என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது மூலநூர் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்ட முனிவர் இப்பகுதியை ஆண்ட பூசகுல தொண்டைமானுக்கு வேண்டுகோள் வைக்க அதன் படி இங்கு கோவில் கட்டப்பட்டது. சுந்தரரின் வைப்பு தலமாகவும், பழனி செல்லும் வழியில் இங்கு வந்து இறைவனை திருமூலர் வழிபட்டார் எனவும் வரலாறு கூறுகிறது.
கம்பதாண்டவருக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது. கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபட செய்யப்படுகிறது, சித்திரை முதல் நாள், சித்திர பௌர்ணமி, ஐப்பசி அன்னபிஷகம் சிவரித்திரி அன்று நான்கு கால பூஜை நடைபெறுகிறது. திருகார்த்திகை அன்று அறுபது அடி தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. கால பைரவருக்கு அஷ்டம நாளில், செய்வாய் கிழமைகளில் ராகு கேதுவிற்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சஷ்டி நாட்களில் செவ்வரளி மலர்களால் பூஜை செய்ய புத்திர பாக்கியம் கிடைக்கும்.
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை