கொடுவாய்





	


	



























	




 




	








 




2:18:45 PM         Sunday, May 03, 2026

கொடுவாய்

கொடுவாய்
கொடுவாய் கொடுவாய் கொடுவாய்
Product Code: கொடுவாய்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                      கொடுவாய் , நாகேஸ்வரசுவாமி
 
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்  திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் பழநி செல்லும் வழியில் உள்ளது பல்லடத்தில் இருந்து காங்கேயம் செல்லும் பாதையிலும் செல்லலாம்.
 
இறைவன் : நாகேஸ்வரசுவாமி

இறைவி : கோவர்த்தனாம்பிகை
 
தல விருட்சம்  : வன்னிமரம்

 

தல சிறப்புகள் :  கொடுவாய் நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு ஒருமுறையாவது சென்று வருவதென்பது கயிலாயத்தின் கதவுகளை தொட்டு வருவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது.

தல வரலாறு : பலருக்கும் குலதெய்வமாக விளங்கி வரும் இத்தல இளைவனின் பெருமைகளைச் சொல்லும் சம்பவங்கள் பல உண்டு. காஞ்சி மாநகரில் பிறவியிலேயே பார்வைத் திறனற்ற ஒருவன், தனக்கு பார்வை அருளிட திருநாகேஸ்வரத்திலுள்ள ஏகாம்பரநாதரை வேண்டினான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்து மனமிரங்கிய இறைவன், அவனுக்கு ஒரு கண்ணில் பார்வையை நல்கினார். பின் மற்றொரு கண் பார்வையை கொங்கு நாட்டில் உள்ள கொடுவாயில் எழுந்தருளியுள்ள நாகேஸ்வரரை வழிபட்டு பெறும்படி கூறினார். அவர் சொன்னபடி கொடுவாய் வந்த அவன், நாகேஸ்வர சுவாமியை வழிபட்டு மறுகண்ணிலும் பார்வை பெற்றான். இதனால் கொடுவாய் ஆலயத்தையும் மற்றொரு திருநாகேஸ்வரமாகவே எண்ணுகிறார்கள்.
 

கோவில் அமைப்பு : கற்றளியாலான கோயில் இது கி.பி.12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இறைவனுக்கு வலதுபுறம் கோவர்த்தனாம்பிகை எனும் பெயருடன் வீற்றிருக்கிறாள் தேவி. ஆவுடை நாயகி என்ற பெயரிலும் இவளை அழைக்கிறார்கள். ஈசனின் வலதுபுறம் அமர்ந்திருப்பதால் கோவர்த்தனாம்பிககையை வணங்கினால் சீக்கிரமே திருமணத்தடை விலகுகிறதாம். அம்மன் சன்னதி அருகே முப்பது வருடங்களுக்கு முன் தோன்றிய நாகப் புற்று ஒன்று இருக்கிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்தப் புற்றை வணங்கினாலும் ராகு தோஷம் நிவர்த்தியாகுமாம். அரிதாக சில சமயம் இந்தப் புற்றிலிருந்து நாகம் வெளிப்படுவதைப் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள், அடிக்கடி இத்தலம் வரும் பக்தர்கள். பிரம்மனே இங்கே வன்னிமரமாக இருப்பதாக ஐதிகம். பஞ்ச பாண்டவர்கள், துரியோதனன் அறியாவண்ணம் வன்னி மரம் ஒன்றில்தான் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். காலை எட்டு மணியில் இருந்து ஒன்பது மணிக்குள் இந்த வன்னி மரத்தை பன்னிரண்டு முறை சுற்றி வந்தால்  தோஷம் நீங்குமென்பது நம்பிக்கை.

ஒரே கல்லில் ஆன தீபஸ்தம்பம், சனீஸ்வரர் சன்னதி. அதற்குப் பின்புறம் நவகிரகங்கள் மேடையில் காட்சியளிக்கின்றன. அவற்றைச் சுற்றி வந்தால் பைரவர் சன்னதி. பைரவருக்கு முன் சந்திரனும், அடுத்து சூரியனும் வீற்றிருக்கின்றனர். புளியமரத்தின் அடியிலும் ஓர் பிள்ளையார் இருக்கிறார். முற்காலத்தில் இந்தக் கொடுவாய் தலம், முல்லை வனம் என்றே குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. கருவறையில் நாகேஸ்வரசுவாமி பக்தர்களின் வேண்டுதலைப் புறக்கணிக்காது அருள்பாலிப்பவராக அருள்மணம் கமழ காட்சியளிக்கிறார். அவருக்கு இடப்புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கையும் அருகே சண்டிகேஸ்வரரும் உள்ளனர். இங்கு ஒரே தலத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரையும் ஒன்றாக தரிசிப்பது சிறப்பு.
 
தாய் தந்தையரான ஈசனும், தேவியும் சர்வ லட்சணத்துடன் வீற்றிருந்து காட்சி புரிய, அவர்களுக்கு பின்னே அமர்ந்து ஆசி வழங்குகிறார்கள். கோவர்த்தனாம்பிகை சன்னதியின் பின்புறம் அமர்ந்திருக்கிறார் மோதக பிரியனான ஆனைமுகன். இங்கே அவர் பெயர், மாப்பிள்ளை விநாயகர். ஈசன் சன்னதியின் பின்புறம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். முன்புறம் மயில் வாகனம் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் முல்லை, அரளி, நந்தியாவட்டை மலர்கள் நிறைந்த தோட்டம் பசுமை விரித்திருக்கிறது. சிறிய செயற்கைக் குளத்தின் நடுவில் லட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்த நிலையில் சுதைவடிவாக உள்ளனர். ஏறக்குறைய ஏழடி உயரத்திற்கு பரந்து விரிந்து ஒரு புற்று உள்ளது. சனிபகவான், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிரக நாயகர்கள், சூரியன், சந்திரன் போன்றோர் அருளும் இவ்வாலயத்தில் அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி என்று முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
 
தினசரி மூன்று கால பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேக கோலத்தில் நாகேஸ்வரரை தரிசிப்பது அடுத்த பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தைச் சேர்க்கும் என்பது ஐதிகம்.  பிராகாரத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு எலுமிச்சை தீபத்தை ஏற்றிவைத்து வணங்கினால் ஏற்றமிகு வாழ்க்கை நிச்சயமாம். ராகு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், கண்பார்வை பிரச்னைகள் நாகேஸ்வரரை வழிபட்டால் நீங்குமென்கிறார்கள். கண்புரையோடு போராடும் பெரியவர்கள், சிறுவயதிலேயே கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற சிக்கலுடைய குழந்தைகள் என்று பலரும் இங்கு வந்து ஈசனை கண்குளிர வணங்கி நற்பலன் பெறுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இது இராகு, கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது.
 
காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர் 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : இல்லை
 
உணவு வசதி : இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×