கொரடாச்சேரி





	


	



























	




 




	








 




2:03:33 PM         Thursday, April 30, 2026

கொரடாச்சேரி

கொரடாச்சேரி
கொரடாச்சேரி கொரடாச்சேரி கொரடாச்சேரி கொரடாச்சேரி கொரடாச்சேரி கொரடாச்சேரி கொரடாச்சேரி கொரடாச்சேரி
Product Code: கொரடாச்சேரி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                             கொரடாச்சேரி, பஞ்சநதீசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில்  குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரி அருகில் அமைந்துள்ளது. 

இறைவன்: பஞ்சநதீசுவரர்

இறைவி : தர்மசம்வர்த்தினி

தல விருட்சம்  : பாரிஜாதம், அரசு, வில்வம், துளசி 

தல தீர்த்தம் :  சூரிய புஷ்கரணி

தல சிறப்புகள் : பங்குனி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாலை 6 மணிக்கு நந்திகேஷவரின்  கொம்புகளுக்கு இடையேvசூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது. பார்வையற்றவர்கள் முன்னர் இப்பகுதியில் வழிபாடு நடத்தியதால் குருடர்சேரி என்ற பெயர் பெற்று பின்னர் கொரடாச்சேரி என்றானது என்று கூறுகின்றனர்.

கோவில் அமைப்பு : பஞ்சநதீசுவரை பஞ்சலோகங்களைக் கொண்டு பஞ்சபூதங்கள் வழிபட்டதால் மூலவர் இப்பெயரைப் பெற்றுள்ளார். இறைவி தெற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். சிவ விஷ்ணு தலமானதால் மேற்கு பக்கம் நான்கு கலசங்கள் அமைக்கப்பட்டுஉள்ளது. ராஜ கோபுரம் வழியே கிழக்கு பக்கம் நந்தியும் மேற்கு பக்கம் நாக ஆபரணத்தில் மூலவர் அருள்பாலிக்கின்றனர். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில். காளஸ்தியில் அவதரித்த சுப்ரமணிய சுவாமிகள் இக்கோவிலை புதுப்பித்துள்ளார். திருஞானசம்பந்தர் புதூர் வழியாக செல்லும் போது திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர், திருவிடைவியல் கோவிலுக்கு சென்று பாடல் பாடியதற்கு இக்கோவில் வழியாக சென்றுஇருக்கலாம் என வரலாறு கூறுகிறது.

மடப்பள்ளி எதிரில் மகா மண்டபமும் உள்ளது.இங்கு  500 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். கர்ப்பகிரகத்தில் ஒரு கலசமும், பிற சன்னதிகளில் தனி தனியாக கலசங்கள் உள்ளன. அம்பிகை தெற்கு முகமாகவும், திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், சனீசுவரர், லிங்கோத்பவர், சர்வ சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர்ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். 1925, 1957, 1958 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.  கோவில் நுழைவாயில் வலப்பக்கம் கிழக்கு முகம் ஸ்ரீதேவி, பூதேவி உடன் ஸ்ரீனிவாச பெருமாலும், அவரை பார்த்த வண்ணம் கருடாழ்வார், வடக்கு முகம் பார்த்து ஆபத் சகாய ஆஞ்சநேயர் உள்ளனர்.    

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், மாசி மகம், சிவராத்திரி மற்றும் பெருமாள் சன்னதி உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. திருமண தடை, குழந்தை பாக்கியம், சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க வேண்டி கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் யோமங்கள் செய்தும் அன்னதானம் செய்தும், நவக்கிரக யாகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 

காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  நீடாமங்கலம், ஆடுதுறை, கும்பகோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×