பழவனக்குடி, காசி விசுவநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் கொரடாச்சேரி அருகில் பழவனக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இறைவன்: காசி விசுவநாதர்
இறைவி : விசாலாட்சி
தல விருட்சம் : பலா, வெள்ளெருக்கு, பன்னீர், வன்னி, வில்வம்
தல தீர்த்தம் : திருக்குளம்
தல சிறப்புகள் : இங்குள்ள மூலவர் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டவர் என்று கூறுகின்றனர். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கினால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
கோவில் அமைப்பு : ப வடிவ நீரோட்டத்தின் நடுவில் இக்கோவில் கிழக்கு பக்க நுழைவாயிலுடன் அமைந்துள்ளது. மேற்கு பக்கம் பைரவர் உள்ளார். நுழைவாயில் முன்பு சிற்பங்கள் மட்டும் உள்ளன. கோவில் எதிரில் திருக்குளம், மடப்பள்ளி எதிரில் மகா மண்டபம் உள்ளது. சோழ காலத்தினர் மற்றும் மன்னர்கள் வழிபட்டுள்ளனர். முற்காலத்தில் தோட்டத்தில் இருந்த பழங்களை அரச வம்சத்திற்கு கொடுக்கப்பட்டதால் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் நுழைவாயில் கிழக்குத் திசையில் உள்ளது. திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கையம்மன், சனீசுவரர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். கோயிலின் எதிரில் குளம் உள்ளது.1968, 2000, 2013 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன.சோழ மன்னர்களும், பிற மன்னர்களும் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.
இக்கோவிலில் வெளேருக்கு நாரில் கயிராக்கி குழந்தைக்கு இடுப்பில் கட்டியதால் பல்வேறு நோய்கள் குணமாகியதால் இப்பகுதில் நிறைய வெள்ளெருக்கு வளர்க்கப்பட்டுள்ளது. பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், மாசி மகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நீடாமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை