ஓட்டக்குடி, திருநங்காளீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் திருவாரூலிருந்து மேற்கு நோக்கி 22 கி.மீ, நீடாமங்கலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : திருநாங்காளீஸ்வரர்
இறைவி : காம கோட்டத்து நாச்சியார்
தல விருட்சம் : செவ்வரளி, மாவிலங்கை, வெள்ளெருக்கு
தல தீர்த்தம் : பிடாரி
தல சிறப்புகள் : ஈசான்ய மூலையில் சண்டிகேஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர். காளிதேவி தனது கோவம் தீர வேண்டி தவம் செய்து பூஜை செய்து ஈசனை நேரில் தோன்றி காட்சி கொடுத்ததால் இறைவன் திருநாங்காளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : கிழக்கு பக்கம் நோக்கிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. நுழைவாயில் இடப்பக்கம் காளி சன்னதி உள்ளது. செல்வகணபதி, பைரவர், வள்ளி தெய்வானை உடன் முருகன், தட்சணாமூர்த்தி, துர்கை, சனிஸ்வரர் தனி சந்நதி கொண்டு உள்ளனர். இங்கு காளி பூஜை செய்த காரணத்தினால் சிவன் நேரில் தோன்றிய தலம். அதனடிப்படையில் நுழைவாயில் இடப்பக்கம் தட்சணமூர்த்தி பின்னோக்கி 20 அடி தொலைவில் தனி சன்னதியில் காளி இருக்கிறாள். அப்பர் இக்கோவில் குறித்து வைப்பு பாடலாக பாடியதற்கு சோழ காலத்து கல்வெட்டு உள்ளது. மேலும் சகல ஐஸ்வர்யங்கள், தோஷங்கள் நீங்க சிறந்த பரிகார தலமாக இருந்ததால் கி.பி.1133 ம் ஆண்டு இரண்டாம் குலோத்துங்க சோழன் திருப்பணிகள் செய்து தேவவள நாடு என்றழைக்கப்பட்ட இவூர் எதிரிலி சோழபுரம் என பெயர் சூட்டினான்.கி.பி. 1246 ம் ஆண்டு மூன்றாம் ராஜேந்திரசோழன் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து தனது பெயரை சேர்த்து ஓட்டக்குடி ராஜேந்திரசோழன் என பெயர் மாற்றம் செய்ததாக வரலாறு கூறுகிறது.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், திருத்துரைபூண்டி, தஞ்சாவூர், நீடாமங்கலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை