அப்பரசம்பேட்டை





	


	



























	




 




	








 




1:46:36 PM         Thursday, April 30, 2026

அப்பரசம்பேட்டை

அப்பரசம்பேட்டை
அப்பரசம்பேட்டை அப்பரசம்பேட்டை அப்பரசம்பேட்டை அப்பரசம்பேட்டை
Product Code: அப்பரசம்பேட்டை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  அப்பரசம்பேட்டை , ஆபத்சகாயேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் விடையபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் :  ஆபத்சகாயேஸ்வரர்

இறைவி  :  அகிலாண்டேஸ்வரி

தல தீர்த்தம்  : திருக்குளம் 

தல சிறப்புகள் : மூலவரின் தலையில் வெட்டியது போன்ற வடு இருப்பதை காணலாம். மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. வடக்கு திசையில் துர்க்கை, கிழக்கு திசையில் பாலமுருகன் அருள்பாலிப்பது மிக சிறப்பு.

கோவில் அமைப்பு : சுமார் 5 ஏக்கர் 3 அடி அகலம், 12 அடி உயரத்தில் மதில் சுவர் அமைந்துள்ளது. கோவில் செவ்வக வடிவில் கோபுரம் சிறிய அளவில் தஞ்சை பெரிய கோவில் போன்று இருந்ததால் சிற்பங்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கோயில் நுழைவாயிலில் கொடிமரத்திருக்கான பீடமும், அதற்கு முன்பு நந்தி இடது பக்கம் சாய்ந்த நிலையில் மேற்கு பக்கம் சிவனை பார்த்த வண்ணம் உள்ளது. உள்ளே ஆங்கார நந்தி, விநாயகர், பாலமுருகன் அமைந்துள்ளது. கருவறையில் தெற்கு , மேற்கு, வடக்கு பகுதிகளில் கல்வெட்டு அமைந்துள்ளது. அம்பாள் அபய முத்திரைகளுடன் சிரிப்புடன் காட்சி தருகிறார். சண்டிகேஸ்வரர், தட்சணாமூர்த்தி, இருபக்கமும் ஏகாந்தவாசியான முனிவர்கள் அமைந்துள்ளனர். சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிராத்தனை செய்கின்றனர்.  கோவிலுக்கு முன் அரசமரமும், குளமும் அமைந்துள்ளது.

தல வரலாறு :  500 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர், மன்னார்குடி பகுதியில் பெரு வணிகர் கையில் செல்வங்களுடன் நடந்து சென்றார். இரவு நேரத்தின் போது திருடர்கள் அவரது பொருட்களை திருட முற்பட்டனர். தப்பி ஓடிய வணிகர் காட்டு பகுதியில் உள்ள சிவலிங்கத்தை கட்டி அணைத்தவாறு காப்பாற்றுமாறு கதறினார். அந்த நேரத்தில் திருடர்கள் வணிகரை வெட்டினர். அந்த வெட்டை சிவன் தலையில் வாங்கி வணிகரை காப்பற்றினர். பின்னர் தனது செல்வங்களை கொண்டு தஞ்சை பெரிய கோவில் போன்ற அமைப்பில் கோபுரம்  கட்டினார். 

சிவராத்திரி, பௌர்ணமி, பிரதோஷம்  போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இறைவனுக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  நீடாமங்கலம், ஆடுதுறை, கும்பகோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×