பண்டிதக்குடி, வாலிபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் அருகே உள்ளது.
இறைவன் : வாலிபுரீஸ்வரர்
இறைவி : வாலாம்பிகை
தல சிறப்புகள் : இத்தலத்தில் வாலிக்கு தனி சன்னதி உள்ளது. விநாயகர், தட்சணாமூர்த்தி, முருகப்பெருமான் சன்னதி உள்ளது.
தல வரலாறு : சிறந்த சிவபக்தரான வாலி சர்வ காலமும் பல சிவ தலங்களுக்கு சென்று இதுவரை தான் செய்த பாவங்களை போக்கி புண்ணியங்களை தருவாயாக என மனமுருக வேண்டினான். எனக்கு நேருக்கு நேர் மோதும் எதிரியின் பலத்தில் பாதி எனக்கு வந்து விட வேண்டும் என சிவனை வேண்டினான். சிவலிங்கத்தை நிறுவி அதை நீராடுவதற்கு காட்டின் நடுவே ஒரு குளத்தை நிறுவினான். வில்வத்தை சாற்றி இறைவன் முன் குன் மீதி நீண்ட தவத்தை செய்தான். இறைவன் நேரில் தோன்றி தவத்தை தந்தார். வாலிக்கு சிவன் தரிசனம் தந்த தலங்கள் பல உள்ளன. கூத்தாநல்லூர் அருகில் உள்ள இத்தலமும் ஒன்று.
இங்கு வந்து அம்பாளை வழிபட திருமண தோஷம் மற்றும் சகல தோஷம் நீங்குகிறது. வஸ்திரம் சாற்றி சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக செய்து வழிபட்டால் அனைத்து வித பாக்கியங்களும் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
காலை 5.00 மணி முதல் பகல் 8.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை