வேளுக்குடி





	


	



























	




 




	








 




2:11:48 PM         Thursday, April 30, 2026

வேளுக்குடி

வேளுக்குடி
வேளுக்குடி வேளுக்குடி வேளுக்குடி வேளுக்குடி வேளுக்குடி
Product Code: வேளுக்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                               வேளுக்குடி, ருத்ர கோடீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் அருகே திருவாரூர் மன்னார்குடி சாலையில், திருவாரூரில் இருந்து 12 கி.மீ தொலைவில்  உள்ளது.

இறைவன் : ருத்ர கோடீஸ்வரர்

இறைவி  :  கோமளம்பிகை 

தல சிறப்புகள் :  இங்கு சிவபெருமான் மேற்கு முகமாய் வீற்றிருந்து கைலாச கோலத்தில் ருத்ரகோடீஸ்வரராக காட்சியளிப்பது சிறப்பாகும். மேலும் நேர் எதிரே அமையப்பெற்றுள்ள அதிகார நந்தி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

கோவில் அமைப்பு : இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவருக்கு பதிலாக சாண்டில்ய முனிவர்அமர்ந்து இருப்பது மிக சிறப்பாகும். இங்கு விநாயகர், முருகர், துர்க்கை அற்புத திருமேனியாக உள்ளனர். வசிஷ்டர், சாண்டில்ய முனிவர், நந்தி தேவர், இந்திரன், நவ கிரகங்கள் வழிபட்டு வரம் பெற்ற புண்ணிய தலம். மூலவர் மேற்கு நோக்கிய நிலையில் மயானத்தை நோக்கி உள்ளார். எனவே மன சஞ்சலம், தீராத கடன், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கிறது. குடும்பத்தில் பிரிந்த தம்பத்தினர் ஒன்று சேருவர்.

இரண்டாம் குலோத்துங்க சோழன் தொழு நோயால் தவித்து வந்தான். வேலுங்குடி வந்து இறைவனை வழிபட நோய் குணமாகும் என ஆசிரி கூற இங்கு வந்து குளத்தில் பிரதோஷ வழிபாடு செய்யநோய் நீங்கப்பெற்றான்.  நீண்ட காலம் தொழுநோயால் அவதிபட்டு, இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜைகளை செய்து பூரண குணம் அடைந்தான். கோடி முறை ருத்ர ஜபம் செய்த தலம் என்பதால் இறைவனுக்கு ருத்ர கூடியேஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. வசிஸ்டர் வேள்வி செய்த தலம் என்பதால் இத்தலம் வேள்விக்குடி என்று பெயர் வந்தது.

பிரதோஷம், சனி பிரதோஷம், சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  திருவாரூர், மன்னார்குடி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×