திருச்சென்னம்பூண்டி





	


	



























	




 




	








 




6:06:38 AM         Monday, May 25, 2026

திருச்சென்னம்பூண்டி

திருச்சென்னம்பூண்டி
திருச்சென்னம்பூண்டி திருச்சென்னம்பூண்டி திருச்சென்னம்பூண்டி திருச்சென்னம்பூண்டி திருச்சென்னம்பூண்டி திருச்சென்னம்பூண்டி
Product Code: திருச்சென்னம்பூண்டி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                       திருச்சென்னம்பூண்டி, சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில்  கல்லணை திருவையாறு வழித்தடத்தில் உள்ள கோவிலடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

இறைவன்: திருக்கடையுடைய மகாதேவர்
 
இறைவி: சித்தாம்பிகா
 
தல சிறப்புகள் : சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார். திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு : அம்மனின்  சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் அற்புதமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வாலயம், கி.பி.9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்க வர்மன், முத்தரையர் கோ, இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்டது. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. பிரகாரத்தில் துர்க்கை, சண்டீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
காவிரி நதியின் வடகரையில் சுற்றிலும் பசுமையான தோப்புகள், தேக்கு மரங்கள், வயல் வெளிகள் என பசுமை போர்த்திய சூழலில் ஆலயம் அமைந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் தாங்கி, முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்கவர்மன், முத்தரையர் கோ.இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது. ஆலயம் முழுவதும் கருங்கற்கள் உருவாகியிருக்கிறது. இறைவனின் ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயம் மிகவும் சிதைந்துள்ளதால் இறைவனின் திருமேனியை இறைவியின் ஆலயத்திலேயே வைத்துள்ளனர்.
 
சடைபோல சிக்கல் மிகுந்த பல பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதில் இந்த இறைவன் பேரருள் புரிகிறார். தேவக் கோட்டத்தில் வட திசையில் து ர்க்கையும் வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரரும் உள்ளனர். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது.  தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், தொன்மைக்கும் அழகுக்கும் கட்டிடக் கலைக்கும் இன்றும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த  பிரகதீஸ்வரர் ஆலயம் அமைவதற்கே முன்மாதிரியாக ஓர் ஆலயம் திருச்சென்னம் பூண்டியில் உள்ள சடையார் ஆலயம்தான். ஆலயம் திறந்த  வெளியில் அமைந்துள்ளது. மதில் சுவரோ, சுற்றிவர பிராகாரமோ எதுவும் கிடையாது. .
 
காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
 
அருகிலுள்ள  நிலையம்   :  திருவாரூர், நாகப்பட்டினம்
 
பேருந்து  வசதி   : இல்லை
 
தங்கும் வசதி   :  இல்லை
 
உணவு வசதி : இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×