மணக்கால் அய்யம்பேட்டை, சேஷபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை, வடகண்டம் ஊர்களைத் தாண்டி மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது.
இறைவன் : சேஷபுரீஸ்வரர்
இறைவி : அந்தப்புரத்து நாயகி
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : மூலவர் சுயம்புமூர்த்தியாக மேற்கு பார்த்த வண்ணம் உள்ளார். பங்குனி 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மாலை 6 மணிக்கு மூலவர் மீது சூரியன் கதிர்கள் விழுகிறது.
கோவில் அமைப்பு : கோவில் பிரகாரத்தில் விநாயகர், தட்சணமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், அர்த்தநாதீஸ்வரராக ஒரு கையில் வளையல், காலில் சிலம்பு, மெட்டி என காட்சி தருகிறார். அவரை பார்த்த வண்ணம் நந்தி படுத்துள்ளது. அருகில் சகாதி முனிவர்கள் உள்ளனர். கோவிலில் கிழக்கு நோக்கியும் விநாயகர் மேற்கு நோக்கியும் இருப்பது மிக சிறப்பு. பிரகாரத்தில் மகா மண்டபம் எதிரில் மடப்பள்ளி உள்ளது. சண்டீகேஸ்வரர் நுழைவாயிலில் சரஸ்வதியும், லக்ஷ்மியும் சிறப்பாக உள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊரான சதுர்வேதி மங்கலம் அருகில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த சோழர் கால தளங்களில் இத்தலமும் ஒன்று. கோவில் மேற்கு பக்கம் பார்த்தவாறு உள்ளது. நந்தியும் பலிபீடமும் ஒன்றாகள்ளது. இக்கோவிலை காரைக்குடியை சேர்ந்த செட்டியார் ஒருவர் பராமரித்துவந்தார். தற்போது திருவாரூர் ஆன்மீக ஆனந்தம் அமைப்பை சேர்ந்த ஒருவர் பராமரித்து வருகிறார்.
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. புத்திர பாக்கியம் பெற சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிராத்தனை செய்கின்றனர்.
காலை 8.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை