ஊட்டியாணி, ஐராவனேஸ்வர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். திருவாரூரிலிருந்து தெற்கே 10 கி.மீ , மன்னார்குடியிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : ஐராவனேஸ்வர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வில்வம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல சிறப்புகள் : சிவன் முதன் முதலில் ஆன்மாக்களுக்கு நெற்பயிரை வளர்த்து உலகத்திற்கு தந்த இடம் என்பதால் இப்பகுதிக்கு என்று பெயர் வந்தது. சிவன் இங்கு சுயம்பாக உள்ளார். பங்குனி மாதம் 21,22,23 ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 6.15 மணி வரை சூரியன் ஒளி மூலவர் மீது விழுகிறது.
திருக்கோவிலில் மூலவர், அம்பாள் ஒரு கலசத்துடன் கூடிய தனி சன்னதி கொண்டு உள்ளது. தட்சணமூர்த்தி, கால பைரவர், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன் சன்னதி உள்ளது. நீண்ட காலமாக மண்னில் புதைந்துண்ட லிங்கம் சில ஆண்டுகள் முன்பு தான் எடுத்து வழிபட்டனர். நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சோழர்கள் கட்டிய 108 சிவத்தலங்களுள் இத்தலமும் ஒன்று.
பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. இங்கு திருமண தடை, தொழில் வளம் உயர வேண்டி , புத்திர பாக்கியம் பெற சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்க பிராத்தனை செய்கின்றனர்.
காலை 8.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், திருத்துரைபூண்டி, நாகப்பட்டினம், காரைக்கால்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை