கோட்டையூர், அகத்தீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கோட்டையூர் வலங்கைமன் வட்டத்தில் உள்ள கிராமமாகும். திருவாரூர்லிருந்து மேற்கு நோக்கி 27 கி.மீ தொலைவில், வலங்கைமனிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : அகத்தீஸ்வரர்
இறைவி : தர்மாம்பாள்
தல விருட்சம் : பூளை
தல தீர்த்தம் : சிவ புஷ்கர்ணி
தல சிறப்புகள் : ஈசன் சுயம்பாக உள்ளார். சிதலமடைந்த இக்கோவிலை அருட்சித்தர் பாடகச்சேரி இராமலிங்க ஸ்வாமிகள் பாலஸ்தானம் செய்தார்.
கோவில் அமைப்பு : கோவில் கிழக்கு பக்கம் நோக்கி உள்ளது, மேலும் மூலவர் கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியுள்ளார். மகா மண்டபத்தில் அப்பர், திருஞானசம்பந்தர், நர்த்தன விநாயகர் அருள்பலிக்கின்றனர். பலிபீடம், கோவிலின் இடப்பக்கம் குபேர விநாயகர், முருகர் தனி சன்னதியில் ஒரு கலசத்துடன் உள்ளனர். கோவில் ஆறு கலசங்களுடன் தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். பஞ்ச பூதங்களின் குருவான அகஸ்தியர் முனிவர் இறைவனின் திருமண கோலத்தை காண தென் திசை நோக்கி பயணித்த போது முனிவர் பூஜை செய்த இடம், சோழர் வம்சத்தினர் கட்டிய 108 கோவில்களில் இத்தலமும் ஒன்று.
உடல் நலம், மனநலம் பாதிப்பு உள்ளானவர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்கின்றனர். பௌர்ணமி மற்றும் திங்கள் கிழமைகளில் நாவல் பழம் வைத்து, நெய் கலந்த சாதத்தை அம்பாளுக்கு, அகஸ்தியருக்கு பால் அபிஷேகம் செய்து மரிக்கொழுந்து மாலை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கிறது.
காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர், நீடாமங்கலம், கும்பகோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை