தேவர் கண்ட நல்லூர்





	


	



























	




 




	








 




5:04:49 PM         Thursday, April 30, 2026

தேவர் கண்ட நல்லூர்

தேவர் கண்ட நல்லூர்
தேவர் கண்ட நல்லூர் தேவர் கண்ட நல்லூர் தேவர் கண்ட நல்லூர் தேவர் கண்ட நல்லூர் தேவர் கண்ட நல்லூர் தேவர் கண்ட நல்லூர் தேவர் கண்ட நல்லூர்
Product Code: தேவர் கண்ட நல்லூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                         தேவர் கண்ட நல்லூர்,  பெத்தனேஸ்வரன்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் தேவர் கண்ட நல்லூர் எனும் ஊரில் உள்ளது.

இறைவன் : பெத்தனேஸ்வரன்

இறைவி  :  பெரிய நாயகி

தல விருட்சம் : வேம்பு

தல சிறப்புகள் :  சிவ பெருமான் உத்தரண்டயராக உள்ளார்.  அனைத்து விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்யப்படுகிறது.தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் இப்பகுதி தேவர் கண்ட நல்லூர் என்று அழைக்கப்படுகிறது. 

கோவில் அமைப்பு : கோவிலின் தெற்கு பக்கம் நிழைவாயிலின் அருகே தல விருட்சம் உள்ளது. ப வடிவில் மகா மண்டபம் உள்ளது.கோவிலினுள் 16 கலசங்களுடன் ஆதி உத்தரண்டையார், எமதுதன், எமதர்மன் மூலவர்களாக பெரியாச்சி, ஜஸ்டிதேவி, பிடரி, சாஸ்தா, முருகன் ஆகியோர் மேற்கு பார்த்து உள்ளனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டது. முருகன் மயில் மீது அமர்ந்து வடக்கு பக்கம் பார்த்து அமைந்துள்ளது. காத்தாயி அம்மன், நடராஜர், பிரம்மநாயகி, பத்திரகாளி, பூத கணங்கள், ரிஷி முனிவர், வீமன் உள்ளிட்ட விக்கரங்கள் உள்ளன.  

தல வரலாறு : வல்லளால மகாராஜா மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில், அவளது குழந்தை உயிருடன் பிறந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு வரும் என்று தேவ முனிவர்கள் பார்வதியிடம் வரம் கேட்டனர். அந்த குழந்தையை அளிக்க பார்வதிதேவி மருத்துவச்சி உருவில் வந்தாள். மகாராஜன் அவளை அழைத்து மருத்துவம் பார்க்க சொன்னார். மருத்துவச்சி ஒரு சொட்டு ரத்தம் கீழே விடாமல் குழந்தையை கொன்றுவிட்டாள். தகவல் அறிந்த மகாராஜா மருத்துவச்சி தலையை வெட்ட தேவியர் ராஜாவின் தலையை வெட்டினாள். அம்பாளின் அக்ரோஷத்தை  தணிக்க பெருமாள் பெத்ரன்யா ஈசனாகவும், ஈசன் உத்தரண்டயராகவும் பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியின் ஆக்ரோஷத்தை தனித்தனர். பிறகு கோவில் எழுப்பினர். விநாயகர் இந்த செயலை கண்டு பிடிக்காததால் இங்கு வரவில்லை என்பதால் இங்கு சிலை இல்லை.

பங்குனி உத்திரம், சிவராத்திரி உள்ளிட்ட அனைத்து விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சகல தோஷங்களுக்கும் பிராத்தனை செய்ய படுகிறது. பபலருக்கும் குல தெய்வமாகவும் இத்தலம் உள்ளது. புது தானியங்கள், ஆடு, கோழி போன்றவற்றை உயிருடன் காணிக்கை செலுத்துகின்றனர். காவடி பால்குடம் போன்றவை நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 7.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள  நிலையம்   :  திருவாரூர்
பேருந்து  வசதி   : உண்டு
தங்கும் வசதி   :  இல்லை
உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×