திருவாரூர் பிரகதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நகரின் மையத்தில் உள்ளது. திருவாரூர் பெரிய கோவில் நிர்வாகத்தில் இத்தலம் உள்ளது.
இறைவன் : பிரகதீஸ்வரர்
இறைவி : மாணிக்க நாச்சியார்
தல சிறப்புகள் : இத்தல இறைவன் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. மூலவர் பிரமாண்ட வடிவிலும், அம்பாள் சிறிய வடிவிலும் உள்ளார்கள்.
கோவில் அமைப்பு : 1000 ஆண்டுகள் மேல் பழமைவாய்ந்தது. இங்குள்ள நந்தி சிறப்புவாய்ந்தது. இறைவன் நேர பார்த்த வண்ணம் இல்லாமல் வலது பக்கம் திரும்பி உள்ளது. பிரம்மன் காவிரியில் நீராடி கோவிலை நோக்கி வேகமாக வருவதை கண்டு இறைவன் அவரை இடைமறித்து காட்சி அருளினார். நந்தி தேவரிடம் தன்னை மறைக்காமல் இருக்க சொன்னதால் நந்தி தலையை சற்று சாய்த்து கொண்டார்.
தல வரலாறு : தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் அமைவதற்கு முன்பே இத்தலம் அமைந்துள்ளது. சிவ தொண்டு செய்து வந்த பரவை நாச்சியார் மீது சுந்தர ஸ்வாமிகள் காதல் கொண்டு அவரை மணக்க துடித்தார். இதனால் சிவதொண்டுக்கு சேதாரம் ஆகும் என்று எண்ணிய பரவையார், சுந்தரின் காதலை ஏற்கவில்லை. அதனால் சிவபெருமானே பரவையாரிடம் தூது சென்று மணம் முடித்தார். இத்தலத்தில் உமையவளுக்கு நாச்சியார் என்று பெயர் இருப்பது சிறப்பாகும். இறைவன் தனது மணக்கோலத்தை காட்டி அருளிய தலம். பிரம்மன் பரமனின் மணக்கோலத்தை காட்சி தந்த இவ்விடத்தில் உமையாள் சமேதராக எப்போதும் விளங்க வேண்டும் என பிரதித்தார்.
கோவிலை சுற்றி உள்ள பிரகாரத்தில் பிரதோஷ நாட்களில் மட்டும் பக்தர்கள் வலம் வருகின்றனர். திருமண தடை நீங்க இங்கு வேண்டி கொள்கின்றனர். வைகாசி விசாகம், திருவாதிரை அஷ்டமி, நவராத்திரி, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை