பாப்பான்குளம் கருத்தீஸ்வரர்





	


	



























	




 




	








 




6:49:37 PM         Saturday, May 16, 2026

பாப்பான்குளம் கருத்தீஸ்வரர்

பாப்பான்குளம் கருத்தீஸ்வரர்
பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் பாப்பான்குளம் கருத்தீஸ்வரர் பாப்பான்குளம் கருத்தீஸ்வரர்
Product Code: பாப்பான்குளம் கருத்தீஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    பாப்பான்குளம்,  திருக்கருத்தீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில்  கடையம் செல்லும் வழியில் பாப்பான்குளம் மெயின்ரோட்டில் கருத்தீஸ்வரர் கோயில் உள்ளது. 

இறைவன் : திருக்கருத்தீஸ்வரர்

இறைவி  :  அழகம்மை

தல சிறப்புகள் : ராமபிரான் தென்திசை நோக்கி சுற்று வலம் வந்தபோது சந்தியாவந்தன பூஜைக்கு, சிவபெருமான் கருணையாற்றில் சுக்காம்பாறை என்னுமிடம் சந்தியாவந்தன பூஜைக்கு ஏற்ற இடம் என கூறியதாகவும், ராமபிரான் கருத்தை அறிந்து கூறியதால் இங்குள்ள சிவபெருமானின் பெயர் திருக்கருத்தீஸ்வரர் என்றும், ஆயக்கலை அறுபத்து நான்கினையும் தனது உடல் அமைப்பாக கொண்டதால் அம்பாள் பெயர் அழகம்மாள் எனவும் பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பம்சத்துடன் உள்ளது.

தல வரலாறு : சம்பகன் எனும் அரக்கன் ஞானபீடமாகிய மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரமான சிவ சைலம் பகுதியில் தவம் செய்து வந்தான். அந்தச் சமயத்தில் அயோத்தியில் ஓர் அசம்பாவிதம் நடைபெறுகிறது. அதற்குக் காரணம் சம்பகன் தான் என்று உணர்ந்த ஸ்ரீ ராமபிரான் அவனைத் தேடி இப்பகுதிக்கு வருகிறார். இந்தப் பகுதியை வளம்சேர்க்கும் கருணையாற்றின் நடுவில் உள்ள ஒரு பாறையின் மேல் நின்றுகொண்டு சம்பகனைத் தேடுகிறார் ஸ்ரீராமபிரான். வடபுறத்தில் ஒரு ஜோதி தெரிகின்றது. ராமபிரான் அங்கு சென்று வணங்கினார். உடனே அந்த ஜோதியும் சம்பகன் இருக்கும் இடத்தைக் காட்டி மறைகிறது. முக்கண்ணனே ஜோதி வடிவாய் வந்ததை அறிந்த ராமபிரான், "எனது கருத்தை அறிந்து ஜோதியாக வந்து அருளியபடியால் நீர் திருக்கருத்தீஸ்வரர்' எனப் போற்றினார். அன்று மதல் மடவார்வளாகம் பகுதியில் குடிகொண்டுள்ள சிவபெருமான் திருக்கருத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஆற்றின் நடுவே ஸ்ரீ ராமபிரான் நின்ற பாறையில், அவரது திருவடிகளும் சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளன. அப்பாறை இன்றளவும் சக்கரப் பாறை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கடனா நதியும், ராமநதியும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வெவ்வேறு பாதையில் பயணித்து இத்தலத்திற்கு வருமு"போது ராமநதி, கடனா நதியோடு ஐக்கியமாகி விடுகிறது.

கோயில் அமைப்பு:  சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன் ஆதித்தவர்மனால் இக்கோயிலின் திருப்பணிகள் நடைபெற்றது. பாண்டிய மன்னன் ஆதித்தவர்மன் ஆட்சிக்காலத்தில் அவருக்கு சிற்றரசாக இருந்த சதுர்வேதி என்னும் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு சொக்கநாதர் மீனாட்சியம்பாளுக்கும், காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்பாளுக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது.  மிகப்பெரிய மதில் சுவர்களைக் கொண்டு பிரம்மாண்டமான கோட்டையைப் போல் காட்சியளிக்கிறது இத்திருக்கோயில். மதில் மீது வடகிழக்கு மூலையில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். அவர் பக்தர்களால் மூலைக் கருடர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மாண்டமான கூடார வாசல் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தால் கொடி மரத்தையும் பலிபீடத்தையும் காணலாம். அங்கே வணங்கிவிட்டு முன்னேறினால் சன்னதி கருடனைக் காணலாம். தொடர்ந்து உள்ளே சென்றால் யாளி மண்டபம் அமைந்துள்ளது. பெரிய பெரிய தூண்களில் பெரும்பான்மையாக யாளி உருவங்களும், சில தூண்களில் அனுமன் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இம்மண்டபம் யாளி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அருமையான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது இந்த யாளி மண்டபம். இந்த யாளி மண்டபத்தில் தென்மேற்குப் பகுதியில் ஒரு தூணில் பூர்ண புஷ்கலாம்பாள் சமேதராக ஸ்ரீதர்ம சாஸ்தா வீற்றிருக்கிறார். இவருக்கு மண்டல பூஜை மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சாஸ்தாவை வணங்கிவிட்டு மேலும் சென்றால் உள்பிராகாரத்தினை அடையலாம்.

உள்பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் ரங்கமன்னாருடன் சுதை வடிவில் சன்னதி கொண்டுள்ளார். கருடாழ்வாரும் காட்சி தருகிறார். கர்ப்பக்கிரக சுவரின் மேற்குப் பக்கத்தில் யோக நரசிம்மார் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். மேற்குப் பகுதியில் ஸ்ரீதர்ம சாஸ்தாவின் பீடம் உள்ளது. உள்பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் கண்ணன் கையில் வெண்ணெய் ஏந்தியபடிச் சுதை வடிவில் காட்சி தருகிறார். இங்கு கிருஷ்ணஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உள்பிராகாரத்தில் வடக்குப் பகுதியில் விஷ்வக்சேனரையும், உடையவரையும், ஆழ்வாராதிகளின் எண்மரையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். அங்கிருந்து மகாமண்டபத்தினுள் நுழைந்தால் துவார பாலகர்கள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளது.

துவாரபாலகர்களைக் கடந்து அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்தால், பக்கவாட்டுச் சுவர்களில் மூலிகை வண்ணத்தில் ஆழ்வார்கள், லட்சுமி நாராயணர், நாரதர் முதலான சனகாதி முனிவர்கள், மஹாவிஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளை அழகிய ஓவியங்களாக உயிரோட்டத்துடன் காணலாம். அங்கு உற்சவர் ஸ்ரீ ராமஸ்வாமி ஸ்ரீ சீதா லட்சுமண அனுமன் சமேதராகக் காட்சி தருகிறார். கர்ப்பக்கிரகத்தில் சுதை வடிவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சீதா லட்சுமண அனுமன் சமேதராக ஸ்ரீராமசந்திர மூர்த்தியினைக் கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். கர்ப்பக்கிரகத்தின் உள் சுற்றுச் சுவர்களில் ஸ்ரீசீதா தேவி, ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ லட்சுமணர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூலிகை வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வோவியங்கள் நாயக்கர் காலத்தில் வரையப்பட்டவையாக இருக்கும் என்பது தொல்லியல் துறை ஆய்வாளர்களின் கணிப்பு. இத்திருக்கோயில் சுமார் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. புளியமரத்தினடியில் சிறிய கோயிலாக இருந்ததை ஆய்வாளர்களின் கருத்து. புளியமரத்தினடியில் சிறிய கோயிலாக இருந்ததைப் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் விரிவுபடுத்திப் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டினான் என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் புளியமரத்தினடியில் அமைந்திருக்கும் சிறிய கோயிலை ஆதி கோயில் என்று இன்றும் அழைக்கின்றனர்.

ஸ்ரீ ராமபிரானுக்குச் சித்திரை மாதம் பதினொரு நாள்கள் பிரம்மோற்சவசம் நடைபெறகிறது. சித்ரா பௌர்ணமிக்கு முதல் நாள் தோரோட்டம், சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்தவாரி. இத்தலத்தில் ஒரு காலத்தில் ஐந்து ஆலயங்களில் திருத்தேரோட்டம் நடைபெற்றுள்ளன. தை மாதம் தொடங்கி மாசி, பங்குனி, சித்திரை மற்றும் வைகாசியில் முறையே ஸ்ரீபழனியாண்டவர், ஸ்ரீ திருவெண்காடர், ஸ்ரீ திருக்கருத்தீஸ்வரர், ஸ்ரீ ராமஸ்வாமி மற்றும் ஸ்ரீ வன்னியப்பர் ஆலயங்களில் உற்சவமும் திருத்தேரோட்டமும் சிறப்பாக நடைபெற்றுள்ளன. இப்போது ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் மட்டும் உற்சவமும் தேரோட்டமும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலயத்தில் யாளி மண்டபத்தில், ராமதூதன் ஆஞ்சநேயன் உருவம், ஒரு தூணில் ஆண் வடிவத்திலும், மற்றொரு தூணில் கையில் குழந்தையுடன் பெண் வடிவத்திலும் வடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத பெண்கள் ஆண் வடிவ ஆஞ்சநேயரை வலம் வந்து ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியினை மனமுருகி வணங்கினால் திருமணம் உடனே கைகூடும். குழந்தைப் பாக்கியம் வேண்டும் தம்பதியினர், பெண்வடிவில் குழந்தையுடன் காட்சிதரும் ஆஞ்சநேயரை வலம் வந்து மனமுருகி வேண்டினால் குழந்தைச் செல்வம் உடனே கை கூடும். இப்படிப் பயனடைந்தவர்கள் ஏராளம். மேலும் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வணங்கிவிட்டு மூலைக் கருடருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்தால் அக்காரியம் வெற்றிகரமாக நடந்தேறும்.

காலை 6.30 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் :  தூத்துக்குடி, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருநெல்வேலி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×