அத்தாளநல்லூர்





	


	



























	




 




	








 




5:06:30 AM         Sunday, May 17, 2026

அத்தாளநல்லூர்

அத்தாளநல்லூர்
அத்தாளநல்லூர் அத்தாளநல்லூர் அத்தாளநல்லூர் அத்தாளநல்லூர் அத்தாளநல்லூர் அத்தாளநல்லூர்
Product Code: அத்தாளநல்லூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அத்தாளநல்லூர், மூன்றீஸ்வர முடையார் 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில் அத்தாளநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கோயிலாகும்.
இறைவன் : மூன்றீஸ்வர முடையார்

இறைவி  :  மரகதவல்லி

தல சிறப்புகள் : மூலவர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். இங்கு தட்சிணாமூர்த்தி வலது காலை தொங்க விட்டு, முட்டியின் மீது இடது காலை மேல் நோக்கி இருக்குமாறு இருப்பது மிக சிறப்பு.

கோவில் அமைப்பு : நன்கு கால் மண்டபம், முக மண்டபம், பலி பீடம் நந்தி, செப்பு தகடு போர்த்திய கொடி மரம் உள்ளது. மேற்கு பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னதிகளில் லிங்கத்தை பிதிஷ்டை செய்துள்ளனர். கருவறையின் மேல்புறத்தில் அகலமான விமான பீடத்தில் யாளி வரிகளும், பூத வரிகளும் உள்ளன. இக்கோயிலில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன.  இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.  சித்ரா பௌர்ணமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

தல வரலாறு : மரகதவல்லி உடனுறை கயிலாய மலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். கயிலையில் திருமணம் நடக்கும் நேரத்தில் அகத்தியர் முதலான முனிவர்கள் இவ்விடம் வந்து சிவனையும் அம்பாளையும் நினைத்து வழிபட சிவபெருமான் தேவியுடன் காட்சி அளித்தார். அதன் பின்னர் நாட்கள் சில கடந்த நிலையில் லிங்க மேனியும், அம்பாள் திருமேனியும் கிடைக்கப்பெற்று அவ்விடத்திலேயே கோயில் கட்டப்பட்டது. மூன்று லிங்கத்திருமேனி ஒரு கூட்டப்பட்டது என்பதால் இத்தல சிவநாமம் மூன்றீஸ்வரமுடையார் என்பதாகும். 

காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  திருநெல்வேலி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×