ஆண்டிபட்டி, மீனாட்சி சுந்தரேஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தேனி மாவட்டத்தில் தேனியில் இருந்து மதுரை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் ஆண்டிபட்டியில் மெயின் கடை வீதியில் அமைந்துள்ளது.
இறைவன் : சுந்தரேஸ்வரர்
இறைவி : மீனாட்சி
தல விருட்சம் : வில்வமரம்
கோவில் அமைப்பு : பாண்டியர்கள் காலத்து கோயிலான இந்தக்கோயிலில் பிரமாண்டமான ஏழு நிலை ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது .மூலவர் சுந்தரேஸ்வரர் கிழக்கு பார்த்தும், அம்மன் மீனாட்சி தெற்குதிசை நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் கோடி விநாயகர், சந்தான விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, முருகர் சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி, நவக்கிரகங்கள், பைரவர், அடுத்து சூரியன் சந்திரன் அருகே அருகே ஒரே திசை பார்த்து தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உளளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது என்று கூறுகின்றனர,மதுரை மீனாட்சி கோயில் போல, மிகவும் பழமையான இத்தலத்தில் பல சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்,பல காலகட்டத்தில் பல சித்தர்கள் ஆண்டிகள் வேடத்தில் இங்கு தங்கியிருந்தனர். இவர்களில் சிவனாண்டி என்ற சித்தரும் ஒருவர்.இவர் பல காலம் இங்கு தங்கி சித்து விளையாட்டுக்கள் செய்து வந்தார். இவரது ஜீவ சமாதி இங்குள்ளது . இந்த சமாதிக்கு மேல் இத்தலத்தின் விருட்சமான வில்வமரம் அமைந்துள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இத்தலவிருட்சத்தின் கீழ் தரப்படும் விபூதியை பூசினால் நாள்பட்ட நோய்கள் விரைவில் குணமாகிவிடும் வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வெள்ளி ''வேலுக்கு''சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தவழிபாட்டில் கலந்து கொண்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எந்தவித குறைபாடும் இன்றி திருப்தியாக வாழலாம் என்பதால் பெரும்பாலானோர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண்டிகளாக சித்தர்கள் இங்கு வந்து தங்கியதால், இத்தலத்திற்கு ஆண்டிபட்டி என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது. இங்கு சிவனின் பின்புறம் உள்ள லிங்கோத்பவரின் அருகே பிரம்மா, விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும்
இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சித்தர்கள் சிலர் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் நினைத்தபோதெல்லாம் சுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பினர். சித்தர்கள் தனித்து சிவனை வணங்குவதையே விரும்புவர். இதற்காக, இவர்கள் காட்டுப்பகுதியில் லிங்கம் இருக்கிறதா என தேடியலைந்தனர். ஓரிடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபட்டனர். ஆண்டிகளான சித்தர்கள் தங்கியதால், அந்தப்பகுதிக்கு ஆண்டிப்பட்டி என்று பெயர் வந்தது. பின்னர் மீனாட்சியம்மைக்கும் சன்னதி எழுப்பப்பட்டது
சூரியனும் சந்திரனும் அருகருகே அருள்பாலிக்கின்றனர். எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளதால், சோமாஸ்கந்த தலமாக உள்ளது. இதை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்கும். இத்தல பிள்ளையார் 'கோடி விநாயகர்' எனப்படுகிறார். இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும். முருகன் வடக்கு பார்த்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும். இங்குள்ள வீராசன தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்காக வழிபாடு செய்வதற்கு நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், குழந்தை பிறந்து பிறந்து இறப்பவர்களின் குறை தீர்ப்பதற்காக ஒரு சில கோயில்களே உள்ளது. அதில் முதன்மையான கோயில் இது. குழந்தை பிறந்து, பிறந்து இறக்கும் தோஷம் உளளவர்கள், இங்குள்ள சிவன், முருகன், அம்மன் மூவருக்கும் பாலபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி பிறந்த குழந்தைகள் இறக்காது என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர். தீராத வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் இங்கு தினமும் மாலை வேளைகளில் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.
உணவு சாப்பிடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், உணவு செறிமானம் ஆகாமல் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களும், இங்குள்ள சிவனுக்கு சுத்தன்னம் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டால் விரைவில் குணமாகும். சிவனாண்டி சித்தரின் ஜீவ சமாதி இங்குள்ளது. தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசினால் நோய்கள் குணமாகும் என்று நம்புகிறார்கள். ஊர் செழிப்புடன் இருக்க, வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள வேலுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு திருமணம் செய்து கொண்டால், எந்தவித குறைபாடும் இன்றி வாழலாம் என்பதால், ஏராளமான திருமணங்களும் நடக்கி
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை, திண்டுக்கல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை