திருபுவனம்





	


	



























	




 




	








 




8:59:38 PM         Friday, May 01, 2026

திருபுவனம்

திருபுவனம்
திருபுவனம் திருபுவனம் திருபுவனம் திருபுவனம் திருபுவனம் திருபுவனம் திருபுவனம் திருபுவனம்
Product Code: திருபுவனம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                               திருபுவனம், கம்பகரேஸ்வரர்
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தஞ்சாவூர் மாவட்டத்தில்  அருகே திருவிடைமருதூர் வட்டத்தில் மயிலாடுதுறை  கும்பகோணம் சாலையில் வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 
 
இறைவன் : கம்பகரேஸ்வரர்
 
இறைவி  :  ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி
 
தல தீர்த்தம் : சரபர் தீர்த்தம்
 
தலவிருட்சம் : வில்வம் 
 
தல சிறப்புகள் :  இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தல வரலாறு : முன்னொரு காலத்தில் இரணியன் என்ற அசுரன் தேவர், மனிதர், விலங்கு முதலிய யாவராலும், எத்தகைய ஆயுதத்தாலும், பகல், இரவு என்ற இரு வேளைகளிலும் சாகாத வரத்தைத் தவமியற்றிப் பெறுகிறான்.  மமதையின் உச்சத்தில் தானே கடவுள் என்று அறிவித்து மீறுவோரைக் கொல்கிறான். அகந்தையின் உச்சத்தில் தன்னைக் கடவுளாக ஏற்க மறுத்த மகனையே கொல்லப் பல்வேறு முயற்சிகள் செய்கிறான்.  பலிக்கவில்லை! ஆத்திரத்தின் உச்சத்தில் மகனிடம் “நீ வணங்கும் நாராயணன் எங்கிருக்கிறான்? அவனைக் காட்டு.  உன் கண்முன் அவனைக் கொன்று நானே கடவுள் என்று உனக்கு நிரூபிக்கிறேன்” என்கிறான்.  ப்ரகலாதன் நிதானமாக “நாராயணன் எங்கும் இருக்கிறான், தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்” என்றான்.
 
ஆத்திரத்தோடு அரக்கன் அருகிலிருந்த தூணைக் காட்டி “அவன் எங்கும் இருக்கும் தெய்வம் என்றால் இந்தத் தூணில் இருந்து வெளிவரட்டும்” என எட்டி உதைக்க, சிங்கத்தின் தலையும், மனித உடலும் கொண்ட உருவமாய் நரசிம்மர் தோன்றி இரணியன் குடலைக் கீறி அவனை அழிக்கிறார். அழித்த பின்பும் ஆத்திரம் தீரவில்லை.  அனைவரும் சிவனிடம் காப்பாற்றும்படி முறையிடுகின்றனர். எட்டுக் கால்கள், நான்கு கைகள், இரண்டு இறக்கைகள், கூர்மையான நகங்கள், பற்கள், யாளிமுகம் ஒருங்கிணைந்த தோற்றமாய் சரபேஸ்வரர் தோன்றுகிறார்.  பாதி உருவம் அகோரப் பறவை, மீதி உருவம் அகோர விலங்கு சரபேஸ்வரரைக் கண்ட நரசிம்மருக்குக் கோபம் நீங்கிப் பயம் வந்தது.   சிவனைத் தாக்க விழைகிறார். அப்போது சிவனின் தீண்டலில் சினம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறார் திருமால். 
அனைவருக்கும் ஏற்பட்ட நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் கம்பகரேஸ்வரர் என்ற திருப்பெயர் பெறுகிறார்.  சரபப் பறவையாய்த் தோன்றியதால் சரபேஸ்வரர் என பெயர் உருவானது.
 
கோவில் அமைப்பு : பெரிய திருச்சுற்றுடன் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. கருவறையின் வெளியே திருச்சுற்றில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்று வேலைப்பாடுகளுடன் உள்ளன. இக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். சரபேஸ்வரர் தனிச்சன்னதியில் உள்ளார். சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள். இக்கோயிலின் விமான அமைப்பு மேற்கண்ட கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே அமைந்துள்ளது. போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில். கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.
 
சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள். அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார். சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.
 
பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
 
பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது. எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.  சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது.  சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள். 
 
தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
 
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
 
அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கும்பகோணம்
 
பேருந்து  வசதி   : உண்டு
 
தங்கும் வசதி   :  இல்லை
 
உணவு வசதி : இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×