கௌதமேஸ்வரர்





	


	



























	




 




	








 




11:32:15 AM         Thursday, June 25, 2026

கௌதமேஸ்வரர்

கௌதமேஸ்வரர்
கௌதமேஸ்வரர் கௌதமேஸ்வரர் கௌதமேஸ்வரர்
Product Code: கௌதமேஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                 கும்பகோணம்,  கௌதமேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  தஞ்சாவூர் மாவட்டத்தில்  கும்பகோணம் மகாமகக்குளத்தின் தென்மேற்கு மூலையில்  உள்ளது.

 

இறைவன் : கௌதமேஸ்வரர்

இறைவி  :  சௌந்தரநாயகி

தல தீர்த்தம் : கௌதம தீர்த்தம்

தல சிறப்புகள் : பூணூலில் இருந்து தோன்றியவர். கௌதம முனிவருக்கு அருள் புரிந்ததால் கௌதமேசுவரர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு உபவீதேசர் என்ற பெயரும் உண்டு. 

தல வரலாறு : முன்பொரு காலத்தில் கௌதமர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் சிவபெருமானிடம் பெரும் பக்தி பூண்டவர். பல தலங்களைத் தரிசித்து கொண்டு தில்லையில் திருநடனங்கண்டு களித்துப் பின் சீர்காழியை அடைந்தார். அங்கு பஞ்சம் வந்தது. முனிவர் மனமிரங்கி பஞ்சம் நீங்கும் வரையில் அங்கேயே தங்கி எல்லோருக்கும் அன்னதானம் செய்து மகிழ்ந்திருந்தார். 12 ஆண்டுகள் கழிந்தன. இவ்வாறு உணவு அளித்து வரும்போது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய எண்ணிய சிலர் தம் மாயையால் ஒரு பசுவை உண்டாக்கி அதனை கௌதம முனிவரிடம் அனுப்பினர். பஞ்சத்தால் இளைத்திருந்த பசுவினை கௌதம முனிவர் தடவிக்கொடுக்க அப்பசு கீழே விழுந்து இறந்தது. அம்முனிவருக்குப் பசுக்கொலையாகிய தீவினை வந்ததென்று உடனிருந்தோர் கூறினர். முனிவருக்கு அது சூழ்ச்சி என புரிந்தது. சீர்காழியைவிட்டு மயிலாடுதுறையை வந்தடைந்தார். அங்கு துருவாச முனிவரைக் கண்டார். தமக்குச் சீர்காழியில் நேர்ந்ததைக் கூறினார். துருவாச முனிவரும் பசு வதையினும் பாதகர் உறவு பொல்லாதது. அப்பாதக நிவர்த்திக்கு உடனே முயலவேண்டும் என்று கூறி "நீர் குடந்தை அடைந்து காவிரியாடி மகாமகக்குளத்தின்தென்மேற்கு மூலையில் எழுந்தருளி இருக்கும் உபவீதேசர் பெருமானை தரிசித்துப் பூசித்து வந்தால் பாதகம் நீங்கும்" என்றார். அவ்வாறே கௌதம முனிவரும் குடந்தையை அடைந்து காவிரியில் நீராடி இறைவனை வணங்கினார். இக்கோயிலின் பின்புறம் ஒரு தீர்த்தம் அமைத்து அதில் தினமும் நீராடி வழிபட்டு வரும் நாளில் இறைவன் காட்சியளித்தார். இத்திருக்கோயிலில் பூணூல் அணிவது மிகவும் விசேடமானது. அமிர்தக்கலசம் சிவபெருமானால் சிதைக்கப்பட்டபோது கும்பத்திலிருந்து விழுந்த பூணூல் விழுந்த இடம் இத்தலமாகும்.

கோவில் அமைப்பு : திருக்கோயிலின் திருச்சுற்றில் தென்மேற்கில் கௌதம முனிவரது திருமேனி சிலையாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம். முனிவர் திருவடியில் அவர் தம் இல்லத்தரசியார் நன்னீராட்டி வழிபடுவதை இப்படிமம் வடித்த சிற்பி அழகுடன் காட்டியுள்ளமை கண்டு மகிழத்தக்கதாய் உள்ளது. இந்த கோயில் ராசியில் உள்ள விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும் வழிபட சிறந்த தலம்.   அம்மனைத் தவிர, நார்தன கணபதி, மகா கணபதி, முள்ளன் வள்ளி மற்றும் தேவசேன, தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய சிவாலயங்கள் உள்ளன.   நவகிரக சன்னதியில் சூரியன்,சனி ஆகிய இடங்களில் அவர்கள் இருப்பதைத் தவிர, பிரகாரத்திலும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.   

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  கும்பகோணம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×