திருநரையூர், ராமநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநரையூர் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இந்த ஊருக்கு செல்ல மாவட்டத்திலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.
இறைவன் : ராமநாதர்
இறைவி : பர்வதவர்த்தினி
தல சிறப்புகள் : சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனி பகவான் தனது இரு மனைவியர்களான “மந்தா” தேவி, “ஜேஷ்டா” தேவியுடனும், தனது மகன்களான “குளிகன், மாந்தி” ஆகியோருடனும் காட்சியளிக்கிறார்.
தல வரலாறு : அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவத்தி தன்னை பாதித்திருக்கும் நீண்ட கால நோய் தீர, இத்தலத்தில் இருக்கும் குளத்தில் நீராடி இங்கிருக்கும் இறைவனையும், சனி பகவானையும் வழிபட்ட போது தனது நோய் நீங்க பெற்றார். தசரதரின் மைந்தனான ஸ்ரீ ராமரும் ராவண யுத்தம் முடிந்த பிறகு, தசரதர் வழிபட்ட இக்கோவிலை பற்றியறிந்து இங்கு வந்து புனித நீராடி, மண்ணாலான ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டு இறைவனை வழிபட்டு நலம் பெற்றார். அவரின் அணுக்க தொண்டரான அனுமனும் இங்கிருக்கும் சிவபெருமானை பூஜை செய்து ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அந்த லிங்கம் அனுமந்த லிங்கம் என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வணக்கப்படுகிறது.
கோவில் அமைப்பு : 1000 ஆண்டுகளுக்குமேல் பழமையான இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளனர். ராமநாத சுவாமி கோவிலில், மூலவருக்கு பலி பீடமோ, கொடி மரமோ கிடையாது. ஆனால், சனீஸ்வரருக்கு தனி சன்னிதியுடன், பலி பீடமும், கொடி மரமும் உண்டு. சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. சனீஸ்வரர் தன் இரு துணைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடன் இவர்களது மகன்களான குளிகன், மாந்தி இவர்களை வணங்கிய நிலையில் தசரதர் காட்சியளிக்கிறார், தசரத சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீர, இத்தலத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை வழிபட்டு நிவாரணம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி உள்ளார். தட்சிணாமூர்த்தி தெற்கு பக்கத்தில், சுப்ரமணிய, வள்ளி மற்றும் தேவசேனையுடன், தென்மேற்கு பக்கத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. கஜலட்சுமி, அனுமந்த லிங்கம், அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை அம்மனால் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. ராமபிரான், ராவணனை வதம் செய்து, அயோத்தி திரும்பும் போது, தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டுள்ளார். மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர். நவக்கிரக மேடையின் நடுவே, சனீஸ்வரருடைய தந்தை சூரிய பகவான், தன் மனைவியர் உஷா தேவி மற்றும் பிரத்யுஷா காட்சி அளிக்கிறார். இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அனுமந்த லிங்கமும், மூலஸ்தானத்தில் ராமர் வழிபட்ட ராமநாத சுவாமியும் அருள்கின்றனர். இவர்களுடன் பர்வதவர்த்தினி அம்மன் காட்சி தருகிறாள். ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். கூடவே இவ்வாலய சிறப்புணர்ந்து அனுமனும் சிவ வழிபாடு செய்திருக்கிறார்.
ஜாதகத்தில் இருக்கும் சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட நாட்கள் நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. தங்களின் வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம், திருநரையூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை