பழையனூர், திருப்புவனம் சுந்தரமகாலிங்கம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் பழையனூர் கிராமம், திருப்புவனத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள்து.
இறைவன் : சுந்தரமகாலிங்கம்
உற்சவர் : சந்தன கருப்பன்
இறைவி : அங்காளபரமேஸ்வரி
தல விருட்சம் : வில்வம் அரச மரம்
தல சிறப்புகள் : பழையனுர் கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்குகிறது. குழந்தை பேறு அளிக்கும் இத்தல ஊரில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சந்தன என ஆரம்பிக்கும் பெயர்வைக்கின்றனர் இப்பகுதி மக்கள். இறைவனும் இறைவியும் தனி தனி சன்னதியில் உள்ளது. இவர்களுடன் சோணை சாமி, ராக்காயி, பேச்சி, இருளாயி அம்மன் உள்ளனர். ராமநாதபுர ராஜா சேதுபதி வம்சத்தை சேர்ந்த சந்தன தேவன் பழையனுர் மற்றும் சுற்று வட்டார பகுதியை பாதுகாக்கும் காவல் வீரர்களுடன் நியமிக்கப்பட்டார். அரண்மனை பராமரிப்பில் இடத்தில் கிராம மக்கள் வழிபட சுந்தரமகாலிங்கம் கோவிலை கட்டினார். ஆங்கிலேயர் இப்பகுதியை கைப்பற்ற படைஎடுத்து வந்தனர். போரில் சந்தன தேவன் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடலும் கோவில் வளாகத்தில் புதைக்க பட்டது. மேலும் அவரது வாரிசுகள் ஆங்கிலேயரிடம் இருந்து தப்பிக்க கோவிலினுள் புகுந்து உயிர் தப்பினர். அதனால் குழந்தை வரம் வேண்டி தளத்திற்கு வருகை தருகின்றனர்.
சிவராத்திரி திருவிழா 4 நாட்கள் நடைபெறும். பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை