தாரமங்கலம் , இளமீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 10கி.மீ தொலைவிலும், சேலத்தில் இருந்து மேற்கில் 14 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது
இறைவன் : இளமீஸ்வரர்
இறைவி : தையல்நாயகி
தல தீர்த்தம் : தெப்பம்
தல விருட்சம் : வன்னி
தல சிறப்புகள் : சுயம்புவாக தோன்றிய லிங்கமாக காட்சி தருகிறார். இத்தலத்தில் மூலவரும், நந்தியும் பெரிய வடிவில் உள்ளனர். சுவாமி, இளமையான தோற்றத்தில் காட்சி தருவறதால் “இளமீஸ்வரர்” என்றழைக்கப்படுகிறார்.
தல வரலாறு : தாருகாவனத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த கெட்டிமுதலி என்ற குறுநில மன்னன், ஒரு காலத்தில் இப்பகுதிக்கு வந்தான். இங்குள்ள வனப்பகுதியைக் கண்டதும் வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது. நீண்ட நேரம் வனத்திற்குள் சுற்றியும் விலங்குகள் எதுவும் கண்ணில் தட்டுப்படவில்லை. களைப்படைந்த மன்னன் ஒரு இடத்தில் அமர்ந்தான். அவனுடன் சென்ற சேவகர்கள், மன்னனின் குதிரையை ஒரு இடத்தில் கட்ட முயன்றனர். குதிரையோ அந்த இடத்தில் நிற்காமல் தாவிக்குதித்து வேறிடத்தில் போய் நின்றது. அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது என ஆய்வு செய்தபோது ஏதும் புலப்படவில்லை. உடனே அந்த இடத்தை தோண்ட உத்தரவிட்டான். பூமிக்கடியில் ஒரு இலிங்கம் இருந்தது. பரவசமடைந்த மன்னன், அந்த சுயம்புலிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினான். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.
கோவில் அமைப்பு : பிரகாரத்தில் கல்விச்செல்வம் தரும் பாலவித்யாகணபதி தனிசன்னதியில் உள்ளார். மகாவிஷ்ணு, தனது தங்கை சிவகாமசுந்தரியை இவ்விடத்தில் வைத்துதான் சிவனுக்கு, திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறுகின்றனர். கல்மண்டபம் போல உள்ள தையல்நாயகி தெற்கு நோக்கியபடி அருளுகிறாள். இவளை வணங்கினால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஆறுமுகன், பைரவர், தெட்சிணாமூர்த்தி, சூரியன், நாகர் சன்னதிகள் உள்ளன. இங்கு இறைவனுக்கு சுத்தான்னம் நைவேத்யம் செய்யப்படுகிறது
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் அருகம்புல் மாலை, கொழுக்கட்டை நைவேத்யம் படைத்து இவரை வணங்கிட ஞானம் கிடைக்கும். படிப்பில் மந்தமாக உள்ள மாணவர்களின் பெயரில் இங்கு அர்ச்சனை செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சேலம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை