மடிக்கரே





	


	



























	




 




	








 




5:56:03 AM         Sunday, May 03, 2026

மடிக்கரே

மடிக்கரே
மடிக்கரே மடிக்கரே மடிக்கரே
Product Code: மடிக்கரே
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                               மடிக்கரே, ஓம்காரேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தின் மடிக்கரே மாவட்டத்தில் மைசூருவிலிருந்து மடிக்கரே 80 கி.மீ., கி.மீ தூரத்தில் உள்ளது. பெங்களூருவிலிருந்து பேருந்து உண்டு

இறைவன் : ஓம்காரேஸ்வரர்

தல சிறப்புகள் : குடகு என்றும், கூடல் மலைநாடு என்றும் அழைக்கப்படும் பகுதி கர்நாடகாவிலுள்ள கூர்க் சிறந்த மலை வாசஸ்தலம். இங்குள்ள மெர்க்காரா எனப்படும் மடிக்கரேயில் ஓம்காரேஷ்வர் கோயில் உள்ளது.இக்கோயிலின் குவிமாடத்திற்கு மேல் திசை காட்டும் இருப்பது தனிச்சிறப்பு.

தல வரலாறு: கர்நடாக மாநிலம் மடிக்கரே மாவட்டத்தில் கூர்க் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஓம்காரேஷ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.  இந்தக் கோயிலை 1820ல், மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான்.

இந்த கோயிலில் இஸ்லாமிய கட்டிடக் கலை அம்சங்கள் காணப்படுகின்றன. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின் போது இந்த பிரதேசத்தில் இஸ்லாமிய அம்சங்களும் சேர்ந்துள்ளன.   இந்த கோயிலின் மையத்தில் குமிழ் வடிவ கோபுரமும் நான்கு மூலைகளிலும் தூண் கோபுரங்களும் உள்ளன. ஒரு தர்காவை போன்றே காட்சியளிக்கும் இந்த கோயிலின் வாயிலில் சிவலிங்கமானது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கருகில் ஒரு குளமும் உள்ளது. குளத்தின் நடுவில் ஒரு மண்டபமும் அங்கிருந்து கோயிலுக்குள் செல்வதற்கான பாதையும் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சிவலிங்கம் மஹாராஜாவால் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இந்த கோயிலுக்கு ஓம்காரேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போதைய ராஜா அரசியல் லாபங்களுக்காக ஒரு பிராம்மணரை கொன்று விட்டதாகவும் அந்த பிராம்மணரின் ஆவி பிரம்ம ராட்சஸாக மாறி ராஜாவை துன்புறுத்தியதால் அந்த ஆவியை அடக்குவதற்காக வேண்டி காசியிலிருந்து சிவலிங்கம் எடுத்து வந்து அதை பிரதிஷ்டை செய்து இந்த கோயிலையும் உருவாக்கியதாக அந்த ஐதீக கதை சொல்லப்படுகிறது. பஞ்சலோகத்தால் ஆன இந்த கோயிலின் முன் வாயிற் கதவுகளில் ஹிந்து ஐதீக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஹிந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த கோயில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. 

கோயில் அமைப்பு : கோயில் வாசலில் குளம், சுற்றிலும் மதில் சுவர்கள் உள்ளன.  கோயில் மத்தியில் வசீகரமான குவி மாடமும், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும், அதைச் சுற்றி ரிஷபங்களும் உள்ளன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசிய உருண்டையும். திசைகாட்டும் கருவியும் இருக்கிறது. கோயில் படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழக்கமிடுகின்றன. ஏறியவுடனேயே மூலவர் சந்நிதி உள்ளது. மற்ற கோயில்களை போல் பக்தர்கள் தரிசிப்பதற்கு என விஸ்தாரமான கூடமோ அல்லது தூண்கள் அடங்கிய மண்டபமோ இல்லை. கருவறை கதவின் ஜன்னல் பஞ்சலோகத்தால் ஆனது.  பிரகார சுவரில் புராண, இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.

 

காலை 5.00 மணி முதல் பகல் 8.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : பெங்களூரு

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : பெங்களூரு, மைசூரு

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×