வைக்கம்





	


	



























	




 




	








 




12:39:31 AM         Saturday, May 02, 2026

வைக்கம்

வைக்கம்
வைக்கம் வைக்கம் வைக்கம் வைக்கம் வைக்கம் வைக்கம்
Product Code: வைக்கம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                                            வைக்கம், மகாதேவர் 
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் கேரளா மாநிலத்தின் கோட்டயம் நகரில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவிலும், எர்ணாகுளம் நகரில் இருந்து தெற்கே 33 கி.மீ தொலைவிலும்  அமைந்திருக்கிறது. 
 
 
இறைவன் : மகாதேவர் 
 
தல விருட்சம் :  ஆலமரம்
 
தல சிறப்புகள் : மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு.
 
தல வரலாறு : ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாத புரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை "வியாக்ரபாதர் மேடை" என்று அழைக்கிறார்கள்.
 
கோவில் அமைப்பு : மூலஸ்தானத்தில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர இலிங்கம் அமைந்துள்ளது. அம்மனுக்கு சன்னதி கிடையாது. கோயிலின் தெற்கு பகுதியில் வன துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இந்த சன்னதிக்கு மேற்கூரை இல்லை. வியாக்ரபாதர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்தபோது ஒரு அரக்கி இடையூறு செய்தாள். ஒரு கந்தர்வ கன்னி, சாபத்தால் இப்படி அரக்கியாக மாறியிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்க வியாக்ரபாதர் விநாயகரை வேண்ட, அவர் திரிசூலியை அனுப்பி அரக்கியை 3 துண்டாக்கும்படி கூறினார். அதன்படி செய்ததில் உடல்பகுதி விழுந்த இடத்தில் தான் வனதுர்க்கை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவளை வழிபட்டால் நம்மைப் பிடித்த அரக்க குணங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அரக்கியின் தலைப்பகுதி முத்தோடத்துகாவிலும், கால்பகுதி குடிச்சேலிலும் விழுந்துள்ளது. திரிசூலியை அனுப்பிய கணபதி, இத்தலத்தின் பலிபீடம் அருகே இருக்கிறார்.
 
கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால்,பார்வதியையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். வருடம் தோறும் கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி நாளில் காலை 4.00 முதல் 8.00 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு. இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காணலாம்.  கார்த்திகை அஷ்டமியை ஒட்டி வைக்கத்தஷ்டமி திருவிழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. மாசி அஷ்டமியும் சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.கோயிலில் அம்மன் இல்லை என்றாலும், 12 வருடத்திற்கு ஒரு முறை 12 நாள் தொடர்ந்து தேவி வழிபாடு செய்யப்படுகிறது.
 
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தில் சிவன் காட்சிதந்து,”வேண்டும் வரம் கேள்” என்றார். அதற்கு வியாக்ரபாதர்,”இதே நாளில் தங்களை இவ்விடத்தில் வந்து தரிசிப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்” என வேண்டினார்.இதுவே “வைக்கத்தஷ்டமி” விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனையும், தாரகாசூரனையும் அழித்து முருகப்பெருமான் வெற்றிபெற, வைக்கத்தஷ்டமி தினத்தன்று சிவபெருமானே நேரடியாக இங்கு அன்னதானம் செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தில் வைக்கத்தஷ்டமி தினத்தன்று அன்னதானம் செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு “பிராதல்” என்று பெயர். இந்த அன்னதானத்தில் சிவனும் பார்வதியும் கலந்து கொள்வார்கள் என்பது ஐதீகம்.
 
 
காலை 4.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 
 
அருகிலுள்ள விமானதளம் : கொச்சின் 
 
அருகிலுள்ள  ரயில் நிலையம்   : கோட்டயம் 
 
பேருந்து  வசதி   : உண்டு
 
தங்கும் வசதி   :  இல்லை
 
உணவு வசதி : இல்லை
Mail this page Printable view
×
×
×
×
×
×
×