ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர்





	


	



























	




 




	








 




3:52:30 PM         Saturday, May 02, 2026

ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர்

ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர்
ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர் ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர் ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர் ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர்
Product Code: ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                           ராமேஸ்வரம், ஜடா மகுட தீர்த்தஈஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  ராமநாதபுரம் மாவட்டத்தில்  இரமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 3.5 கிமீ தொலைவில் ஜடா தீர்த்தம் அமைந்துள்ளது. தனுஷ்கோடிக்கு செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஜடா தீர்த்தத்திலும் நீராடி செல்வார்கள்.

இறைவன் : ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் 

தல தீர்த்தம் :  ஜடா மகுட தீர்த்தம்

தல சிறப்புகள் : ராமநாதசுவாமி, தியானலிங்க மூர்த்திகளான அஞ்ஞானேஸ்வரர், ஞானேஸ்வரராக விளங்குகிறார். இங்குள்ள தீர்த்தம் காமம், குரோதம், மோகம் என்னும் மயக்கங்களில் இருந்து மனிதர்களை விடுபடச் செய்கிறது. 
தல வரலாறு : இராவணனை வதம் செய்து சீதாபிராட்டியை மீட்டு வரும் வழியில் இராமேஸ்வரத்தில் தங்கினார் இராமன். தனது சடை முடியில் தோய்ந்திருந்த அரக்கர்களின் ரத்தத்துளிகளை இக்குளத்தில் சுத்தம் செய்து நீராடியதால் பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்றாராம். இந்த இடத்தில் இராமர் உருவாக்கி பூஜித்த லிங்கம் 'இராமலிங்கம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இராமர் தனது ஜடா என்ற சடைமுடியை  அலசி பிராமண வதம் செய்த பாவத்தை களைந்தார். தனது பாவங்களை கழுவி சுத்தம் செய்த பின்னர் தான் இராமர் சிவலிங்கத்தை வணங்கினார். இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பிற கோவில்களுடன் ஒப்பிடும் போது இந்த கோவில் மிகவும் சிறியதாகும். உண்மையில் காவேரி தீர்த்தம் என்று அழைக்கப்படும் மற்றுமொரு தீர்த்தத்திற்குள் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பறவைகளின் அரசனாக இருந்த ஜடாயு இராவணனால் தாக்கப்பட்டு விழுந்து இறந்த இடமாகவும் இவ்விடத்தை சிலர் கருதகின்றனர்.

வேத வியாசரின் மகனாகிய கிளி முகம் கொண்ட சுகர் பல்வேறு யாகங்களை செய்தார். ஆனால், தவயோக ஞானசித்திகளை அடைய முடியவில்லை. ராஜமுனி ஜனகரின் அறிவுறைப்படி சுகர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி, தியானலிங்க மூர்த்திகளாக விளங்கிவரும் ஞானேஸ்வரர், அஞ்ஞானேஸ்வரரை வழிபட்டு ஞானியாக திகழ்ந்தார். கொடுங்கோபியாகிய துர்வாச முனிவரும், சாந்தசீலராகிய பிருகு முனிவரும் வெவ்வேறு காலங்களில் புனித நீராடி அரிதான யோகசக்திகளை பெற்ற சிறப்புடையது  தீர்த்தம்.

மக நட்சத்திரம் வரும் நாட்களில் இக்குளத்தில் நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகங்களில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி லிங்க மூர்த்திகளை வழிபட்டுவர பிரம்மகத்தி தோசம் நீங்கி, கோடி புண்ணியம் சேரும். மனம் தூய்மையடையும். புத்திரபேறு கிடைக்கும். சித்தர்களும், தேவதைகளும் அரூபமாக உலாவரும் இத்தலத்தில் அன்னதானம் நடத்தி, தியானத்தில் ஈடுபடுவதால் பக்தர்களது குறைகளை செவிமடுத்து, தியானலிங்க மூர்த்திகளே நிவர்த்தி செய்வதாக நம்பப்படுகிறது. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம். சிவராத்திரி, மாசி மகம் ஆகியவை முக்கியமானவை. குழப்பமான மனநிலையில் உள்ளவர்களும், பிரச்சனைக்கு முடிவு எடுக்க முடியாமல் தவிப்பவர்களும் இத்தலத்திற்கு வந்து விரதம் இருந்து தியானத்தில் ஈடுபட்டால் தெளிந்த மனதுடன் செல்லலாம்.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : ராமநாதபுரம்

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×