உமையாள்புரம்





	


	



























	




 




	








 




3:52:13 AM         Sunday, May 03, 2026

உமையாள்புரம்

உமையாள்புரம்
உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம் உமையாள்புரம்
Product Code: உமையாள்புரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                       உமையாள்புரம், உமாபதீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உமையாள்புரம் அருகே கடியாப்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : உமாபதீஸ்வரர்

இறைவி  :  மங்களாம்பிகை

தல சிறப்புகள் :  இக்கோயிலின் மூலவராக உமாபதீசுவரர் உள்ளார். தம்மை வழிபடுபவர்களுக்கு மங்களத்தை அருளுவதால் அம்மனுக்கு செம்பருத்தி மாலையும் கிரீடமும் அணிவிக்கின்றனர்.

கோவில் அமைப்பு : இக்கோயிலில் மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்மன் சன்னதி மேற்கு நோக்கிய நிலையிலும் அமைந்துள்ளன. துவார கணபதி, துவார தண்டாயுதபாணி, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. 

தல வரலாறு :  திருமயத்தை சுற்றியுள்ள மக்கள் மாட்டு வண்டிகளை பயன்படுத்தினர். இடையே பாம்பாறு குறுக்கிட்டு மக்கள் அவதிக்கு உட்பட்டனர். இதை பயன் படுத்தி கொண்டு காட்டில் ஒளிந்து கொண்டு பெண்களிடம் இருந்து நகைகளை கொள்ளை அடித்தனர். இத்தகவல் பற்றி திவான் பகதூர் முத்தையா செட்டியாருக்கு சென்றது. பாம்பாற்றின் குறுக்கே தனது சொந்த செலவில் பாலம் ஒன்றை கட்டி கொடுத்து வண்டிகள் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார். தனது தாயார் பெயரில் உமையாள்புரம் கிராமத்தை உருவக்கினார். குளம் வெட்டி நீர்ப்பந்தல், விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்தார். அச்சமயம் காசி பெரியவர் இங்கு வந்து சிவன் கோவில் நிறுவ வேண்டினார். 1929 ம் முதல் சுவாமி, அம்பாள் சன்னதி அமைத்து இன்று வரை வழிபாடுகள் நடைபெறுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு பெற்ற இத்தல அம்பாளுக்கு 11வாரம் மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கிறது. செல்வம், கல்வி சிறந்து விளங்க, மகப்பேறு உண்டாக, துன்பங்கள் நீங்க, நினைத்த செயல்கள் நிறைவேற, வறுமை நீங்க இங்கு வழிபாடு செய்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : புதுக்கோட்டை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×