திருவாலந்துறை





	


	



























	




 




	








 




1:10:43 AM         Friday, May 01, 2026

திருவாலந்துறை

திருவாலந்துறை
திருவாலந்துறை திருவாலந்துறை திருவாலந்துறை திருவாலந்துறை
Product Code: திருவாலந்துறை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                           திருவாலந்துறை, சோழீஸ்வரர் (தோளீஸ்வரர்)

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலைலிருந்து 9 கி.மீ. மேற்கில் வசிஸ்ட நதியின் கரையில் அமைந்துள்ளது.

இறைவன் : சோழீஸ்வரர் 

இறைவி  :  பெரிய நாயகி

தல தீர்த்தம்   :  கிணற்று நீர்

தல சிறப்புகள் : திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டதுமுதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்றுநீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக உள்ளது.

திருமாலும் பிரம்மனும் சிவபெருமானிடம் வந்து தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டதுமுதல், கரிகால் சோழன் வந்து வணங்கியது வரை பல சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், அரியலூர், கடலூர்மாவட்டங்களின் ஊடாகச் சென்று பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. இதற்குஸ்வேதா நதி, நீவா நதி என்ற பெயர்களும் உண்டு. நீவா நதி என்பது வசிஷ்டர் அழைத்தபெயராகும். அர்ச்சுனனின் பாணத்தால் இந்த நதி உருவானதாக புராணக்கதை ஒன்றுண்டு.தீர்த்த யாத்திரை மேற்கொண்ட அர்ச்சுனன் தீர்த்த மலை அடிவாரத்துக்கு வந்தபோதுசிவபூஜை செய்ய ஆயத்தமானான். அப்போது பூஜைக்குத் தண்ணீர் தேவைப்படவே,கண்ணனின் ஆலோசனைப்படி தனது பிறைவடிவ பாணத்தால் மலையைத் துளைத்தான்.அப்போது கங்கையில் பத்திலோர் பகுதி கொண்ட நீர் மலையிலிருந்து பெருகி ஓடியது.அதைத் தொடர்ந்து நடந்த சிவபூஜையின் முடிவில், சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சிதந்து பாசுபதாஸ்திரத்தை அருளினார். அர்ச்சுனன் காலத்திலேயே தோன்றிய நதியென்பதால்இது 5000 வருட வரலாறுடையதென சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்புடையவெள்ளாற்றின் கரையில் பல கோயில்கள் உள்ளன. அவற்றில் சப்த துறைகள் எனப்படும்காரியானுதுறை, திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை(திட்டக்குடி), திருவரத்துறை, முடவன்துறை என்னும் ஏழு துறைகள் உள்ளன. திருவரத்துறைநாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர் இந்த ஏழு துறைகளையும் பற்றி பத்து பாடல்கள்பாடியுள்ளார்.

தலவரலாறு : திருமால், பிரம்மா இருவருக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி உருவானது.அவர்களுக்கு திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தந்த சிவபெருமான்உண்மையைப் புரிய வைத்தார். அதுபோல இந்த தலத்திலும் சிவபெருமான் அவர்களின்சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். திருமாலும் அயனும் சிவனை வழிபட்ட துறை எனும்பொருளில் திருமால் அயன்துறை என வழங்கி, காலப்போக்கில் திருவாலந்துறையெனமருவியதாகச் சொல்லப்படுகிறது. கூகையூர் கோட்டத்தை தலைமையிடமாகக் கொண்டுஆட்சி செய்த மூன்றாம் குலோத்துங்க மன்னன் வானவ கோவராயர் கி.பி. 1179-ஆம் ஆண்டுசித்திரைத் திங்கள் ஒன்றாம் தேதி இவ்வாலயத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். இறைதரிசனத்தின்போது இறைவனுக்கு அருகே படமெடுத்த கோலத்தில் நாகம் ஒன்று காட்சி தந்துமறைந்தது. இதனையடுத்து, அம்மன்னன் இவ்வாலயத்துக்கு நிலங்கள் தந்து இதனைவிரிவுபடுத்திக் கட்டினான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கோவில் திறந்துஇருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  பெரம்பலூர் 

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×