தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




1:32:16 PM         Saturday, May 16, 2026

தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு

தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு
தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு
Product Code: தில்லை காளி - சிதம்பரம் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அருள்மிகு தில்லை காளி திருக்கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில் ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. 
மூலவர்:  தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி
தல சிறப்பு :  இக்கோவிலில் மட்டுமே காளி அம்மன் நான்கு முகங்களில் காட்சி தருகிறாள்.  இந்த கோவிலில் முதன்மையான தெய்வமாக அம்பிகையின் அம்சமான காளி தேவி ஆவாள்.  
கோவில் பெருமை: சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் நடந்த போட்டியில் சிவன்  ஆடினார். அப்போது தனது காலை தலையில் தூக்கி வைத்து போட்டியில் வென்றதால் அம்பிகையின் கோபம் இன்னும் அதிகரித்தது.  கோபத்தை தணிக்க பிரம்மா புகழ்ந்து பாடி நான்கு வேதங்களை  உணர்த்துவதன் போர்த்து நான்கு முகத்தடில் பக்தருக்கு காட்சி கொடுக்க வேண்டினார். பிரம்மனை போல் நான்கு முகத்துடன் தில்லை காளி தனி சன்னதியில் அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி' என்ற பெயரிலும் அருளுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.  
சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில், சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்த்தள்ள காளியால் முடியாமல் போனது. இதனால் அவள் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளது கோபத்தைப் போக்கும் வகையில், பிரம்மா அவளை வேதநாயகி எனப்புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார் . அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவளுக்கு தனி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இன்றும் இவ்வாலயத்தினுள் நுழைய மென்மையாய் ஒரு தனல் நம்மை சூழ்ந்து கொள்ளும். தில்லை காளியன்னைக்கு நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை. காளியன்னையை குங்குமம் கொண்டு சிவக்க செய்திருக்கிறார்கள். அன்னையை வெண் உடையில் அலங்கரித்திருக்கிறார்கள். குங்குமமும், வெண்மையும் கலந்த காளியன்னை வெண்சிவப்பாய் ஒளிர்கிறாள். அருகில் வருவோரின் வாழ்வில் ஒளியூட்டுகிறாள். அவளின் சந்நதியில் சிறிது நேரம் நிற்க ஜென்மங்களாய் வந்த தீவினைகளை தன் அருட்பார்வை கொண்டு கணநேரத்தில் களைகிறாள். தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்து காளியின் முன்பு அமர பஞ்சாய் பாதிப்புகள் பறந்து போகும். இக்கோயில் மிகத்தொன்மையானது. தில்லை அம்மனின் கருவறையைச் சுற்றி காணப்படும் கோஷ்ட மூர்த்திகள் அம்பிகையின் பல்வேரு சக்தி அம்சங்களைத் தாங்கி அழகிய சிலையாக, அருள் பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கின்றனர். தெற்கு பிரகாரத்தில் விநாயகப் பெருமான் ஏழு திருக்கரங்களுடன் அருளும் கோலம் பார்க்க அரிதாகும். நின்ற நிலையில் வீணை வாசிக்கும் கலைமகளின் சிற்பம் அற்புதம். வடக்கு பிரகாரத்தில் துர்க்கையும், சண்டிகேஸ்வரியும் அருள் சுரக்கும் கண்களாய் காட்சி தருகிறார்கள்.
தல வரலாறு: தில்லை காளி அம்மன் கோவில் ஆனது சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் பழமையான திருக்கோவில். சிவ பெருமானுக்கும்  பார்வதி தேவிக்கும் இடையில் தங்களில் யார் பெரியவர்  என்று  சண்டை எழுந்தது. சிவ பெருமானுக்கு கோபம் வர  சிவ பெருமான் பார்வதி தேவியை காளியாக  மாற வேண்டும் என்று சாபம்  கொடுத்தார். பின் பார்வதி தேவி சாபத்தை தீர்க்க அருள்புரியுமாறு சிவ பெருமானிடம் வேண்டினாள். உடனே சிவ பெருமானும் மிகவும் கொடிய குணம்  கொண்ட அசுரர்களா  மக்களுக்கும் , தேவர்களுக்கும் ஆபத்து நேர இருக்கிறது. நீ காளியாகவே  இருந்து அந்த அசுரர்களை  கொல்ல வேண்டும் என்று ஆணையிட்டார். அசுரர்களை வதம் செய்த பிறகு தில்லை திருத்தலத்தில் என்னை நினைத்து தவத்தில்  ஆழ்ந்திரு. நான் அங்கு மிகவும் தவ வலிமை மிக்க வியாக்ரபாதர்  மற்றும் பதஞ்சலி  முனிவர் ஆகியோரின் வணங்குதலின் படி நான் அங்கு நடனம் ஆடுவ்வேன் அப்போது நீ சிவகாமி என்ற பெயருடன் என்னிடம் சரண் அடைவாய்  என்று  கூறினார். பிறகு பார்வதி தேவியும் அவ்வாறே செய்தார். ஆதால் அசுரர்களை கொள்ளும் உக்கிரக காளியாக  தில்லையில்  சேர்ந்தார். 

திறக்கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை 185 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கடலூர் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×