இரும்பாடி





	


	



























	




 




	








 




1:14:44 AM         Thursday, April 30, 2026

இரும்பாடி

இரும்பாடி
இரும்பாடி இரும்பாடி இரும்பாடி இரும்பாடி இரும்பாடி இரும்பாடி
Product Code: இரும்பாடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        இரும்பாடி சோழவந்தான்,  காசி விஸ்வநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் இருந்து 5 கி.மீ. மதுரையில் இருந்து 30 கி,மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து கருப்பட்டி என்ற கிராமத்துக்கு செல்லும் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன. 

இறைவன் : காசி விஸ்வநாதர்

இறைவி  :   விசாலாட்சி

தல தீர்த்தம்  :  வில்வம்

தல விருட்சம் : கிணற்று தீர்த்தம்

தல சிறப்புகள் :  பங்குனி மாத திருவிழா நடை பெறும் நேரத்தில் காசிலிங்கத்தின் நெற்றியில் நேரே சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பி பூஜை செய்கிறான். போரில் வெற்றி பெறுவதற்காக மராட்டி மாவீரன் சிவாஜி இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வ நாதரை வணங்கிய சிறப்பு பெற்ற தலம்.

தல வரலாறு : பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த போது, தற்போது இரும்பாடி என்றழைக்கப்படும் இவ்வூரில் அவர்களின் படை பலத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியினைச் செய்து வந்தனர். அப்போது, கவனக் குறைவு காரணமாக சில வீரர்கள் தம் உடல் உறுப்புக்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வீரர்கள் போரில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆயுதங்கள் தயாரிப்பின் போது வீரர்களின் உடல் உறுப்பு இழப்புகளைத் தவிர்க்கவும், அவர்கள் போர் புரியும் போதும் வேட்டையாடும் போதும் வெற்றி மட்டுமே கிட்டவேண்டும் என்பதற்காகவும் சிவனிடம் முறையிடுவதற்காக, இத்தலத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர்.

தென் மாவட்ட கிராமங்களில் தண்டட்டி எனப்படும் பாம்படத்தை மூதாட்டிகள் காதில் அணிந்திருப்பர். மெழுகின் மேல் கனமான தங்கத்தகட்டால் மூடி இந்த ஆபரணம் செய்யப்படும்.இதை அணியக் காதை வளர்த்து, அதில் பெரிய துவாரம் போடவேண்டும். அதில் பாம்படம் அணியப்படும். இந்த ஆபரணம் வெகு காலத்திற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சிவபெருமானின் மனைவியான பார்வதி முதிய கோலத்தில், பாம்படம் அணிந்து இக்கோயிலில் அருட்காட்சி தருகிறாள். இக்கோயிலில் காசிலிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான பஞ்சநாக சிலைகள் அமைந்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. காசிவிஸ்வநாதர் உயரம் குறைந்தவராக உள்ளார். அவருக்கு முன்பாக உள்ள நந்தி சிலையானது, உயிர்ப்புடன் காட்சி தருகிறது. இத் தலத்தின் தீர்த்தக்கிணறு நீர் இன்று வரையிலும் வற்றாமல் தனிச்சுவையுடன் உள்ளது. 

பங்குனியில் மூன்று நாள் பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் விழா கொண்டாடப்படுகிறது. அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. வேண்டிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், விவசாய தானியங்களும் படைக்கப்படுகிறது. நாகதோஷம் நீங்கிட பஞ்சநாகத்திற்குப் பால் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. திருமணத்தடை நீங்கியவர்கள் சுவாமிக்கு புத்தாடை சாத்துகின்றனர். இக்கோயிலில் காசி லிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடி விலான பஞ்சநாக சிலைகள் அமைந்திருப்பது மேலும் சிறப்பாக உள்ளது. வேண்டிய காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு பால், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், விவசாய தானியங்களும் படைக்கப்படுகிறது. நாகதோஷம் நீங்கிட பஞ்சநாகத் திற்கு பால் ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் செய்து அர்ச்சனைகள் செய்யப்படுகிறது.

காலை 8.00 மணி முதல் பகல் 9.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×