சோழவந்தான் பிரளயநாதர்





	


	



























	




 




	








 




1:01:00 AM         Friday, April 17, 2026

சோழவந்தான் பிரளயநாதர்

சோழவந்தான் பிரளயநாதர்
சோழவந்தான் பிரளயநாதர் சோழவந்தான் பிரளயநாதர் சோழவந்தான் பிரளயநாதர்
Product Code: சோழவந்தான் பிரளயநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             சோழவந்தான், பிரளயநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  மதுரை மாவட்டத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன் : பிரளயநாதர்

இறைவி  :  பிரளயநாயகி

தல விருட்சம் :  வில்வ மரம்

தல சிறப்புகள் :  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். ஜனக மகாராஜா வழிபட்ட திருத்தலம். விசாக நட்சத்திரக்கார்களுக்கான ஆலயம் என்கிறார்கள். மாதந்தோறும் விசாக நட்சத்திர நாளில் வந்து யார் வந்து வேண்டிக்கொண்டாலும் அவை நிறைவேறும். விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு பிரளயநாதரை வேண்டிக்கொண்டால், வீட்டில் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். இதுவரையிலான தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடந்தேறும். மார்கழி மாதம் அருத்ர திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

தல வரலாறு : சில நூற்றாண்டுகளுக்கு முன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருவர், காசியிலிருந்து ஒரு இலிங்கம் கொண்டுவந்து, வைகை ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார். உலகம் அழியும் காலத்தில் ஏற்படுவது போல கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பயந்த மக்கள் சிவனைப் பிரார்த்தனை செய்தனர். சிவன் இரக்கம் கொண்டு வெள்ளத்தை நிறுத்தினார். பிரளயத்தில் காத்தருளியவர் என்பதால் இவர், “பிரளயநாதர்” என்று பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு :  இந்தத் தலத்து நாயகியாக ஜனகை மாரியம்மன் அழகுற ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.  ஜனகை மாரியம்மன் கோயிலுக்குப் பின்னால் மற்றொரு ஆலயம் உள்ளது. சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு திகழும் சிவாலயம்.  மிகச்சிறிய ஆலயம்தான். ஆனால் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில் எனும் பெருமை மிக்க திருக்கோயில். சுவாமியும் அம்பாளும் தனித்தனி சந்நிதிகளில் கோயில் கொண்டிருக்கின்றனர். சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

சுவாமி, அம்பாளுக்கென தனித்தனி சன்னதிகள் உள்ளன. அவ்விரு சன்னதிகளுக்கு நேரே நந்திகள் உள்ளன. மூலவர் பிரளயநாதராகவும், அம்பாள் பிரளயநாயகியாகவும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தின் வலப்பக்கம் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், சுவாமிக்கு பின்புறம் மேற்கு நோக்கி வலம்புரி விநாயகரும், வள்ளி,தெய்வானையுடன் முருகனும், அனுமன், இலட்சுமி ஆகியோர் தனி சன்னதிகளிலும், சுவாமிக்கு இடப்புறத்தில் விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். சுவாமி சன்னதி எதிரே நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பித் தவிக்கும் மனநிலையில் இருப்பவர்கள், செவ்வாய் தோஷம் முதலான தோஷங்களில் உள்ளவர்கள் சோழவந்தான் பிரளயநாத சுவாமியை வஸ்திரம் சார்த்தி வேண்டிக்கொண்டால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். அதேபோல், இங்கே உள்ள விநாயகரும் விசேஷமானவர். விநாயகரின் திருநாமம் பாலகணபதி. இவருக்கும் பிரளயநாதருக்கும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். அதேபோல், பெருமாள் கோயிலில் உள்ள துர்கையைத்தான் விஷ்ணு துர்கை என்று சொல்லுவோம். ஆனால் இங்கே உள்ள சிவாலயத்தில் விஷ்ணு துர்கையை தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமையிலும் ராகுகால வேளையிலும் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், தாலி பாக்கியம் நிலைக்கச் செய்வாள் துர்கை என்பது ஐதீகம். 
 
இங்குள்ள முருகப்பெருமானுக்கு, கந்த சஷ்டியின்போது, ஆறு நாட்களும் சிறப்பு பூஜை நடக்கும். சஷ்டிக்கு மறுநாள்40 படி அரிசியில் தயிர் சாதம் செய்து “திருப்பாவாடை தரிசனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்குள்ள பைரவரும் சிறப்பானவர். இவருக்கு இத்தலத்து விருட்சமான வில்வத்தின் காயை உடைத்து, அதன் ஓடுகளில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதன் மூலம், நம் பக்கம் நியாயமிருக்கும் வழக்குகளில், வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையும், பாதுகாப்பான வாழ்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. சுவாமிக்குப் பின்புறம் மேற்கு நோக்கியுள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி,மறுநாள் அந்த வெண்ணெயைப் பிரசாதமாக வாங்கி அருந்தினால் தீராத வியாதியும் குணமடையும்.

இத்தல விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். செவ்வாய் தோஷம்உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற திருவிழாக்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். சுவாமிக்கு இடதுபுறத்தில், எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கைக்கு,செவ்வாய்கிழமை தோறும் இராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவை நிர்வத்தியாகும்.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  மதுரை

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×