ஆதலையூர்





	


	



























	




 




	








 




2:22:29 PM         Monday, May 25, 2026

ஆதலையூர்

ஆதலையூர்
ஆதலையூர் ஆதலையூர் ஆதலையூர் ஆதலையூர் ஆதலையூர் ஆதலையூர் ஆதலையூர் ஆதலையூர்
Product Code: ஆதலையூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                         ஆதலையூர், பீமேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கும்பகோணம்- நாகப்பட்டினம் சாலையில் திருக்கண்ணபுரத்திற்கு அருகே 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நன்னிலத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது.

இறைவன் : பீமேஸ்வரர்
இறைவி  :  ஆனந்தநாயகி 
தல தீர்த்தம்  : தாமரை தொட்டி
 
தல சிறப்புகள் :  பீமன் நீண்ட காலம் தவமிருந்து பீமேஸ்வர ஸ்வாமியை வழிபட்ட காலத்தில் நீராடிய குளம், நித்திய புஷ்கரணி என்று அழைக்கப்படும் திருத்தாமரைக்குளம். ஆண்டு முழுதும் நீர் நிறைந்து இருக்கும் இக்குளத்தில் தினமும் பகல் 12 மணிக்கு, திருமணத்தின் போது இசைக்கப்படும் மங்கள இசை மிக ஆழத்தில் இருந்து கேட்கிறது. இந்த மங்கள இசையை நீராடி கேட்டு ஆனந்த நாயகி அம்மனை வழிபடுபவற்களுக்குத் திருமணம் உடனே கை கூடுகிறது. மங்கள இசையைக் கேட்பதற்காகத் திருமணம் ஆனவர்கள்கூட இத்திருக்குளத்தில் நீராடுவதற்காகக் குவிகிறார்கள். 

தல வரலாறு : பாண்டவர்கள் தாம் இழந்த நாட்டை மீண்டும் பெற கோயில்களுக்குத் தல யாத்திரையாகச் சென்றபோது பீமன் இங்கு வந்து இக்கோயிலின் அருகேயுள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு அருள் பெற்றதால் மூலவர் பீமேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனைத் தேடி வந்து பசு வடிவத்தில் இங்கே கண்ட இறைவி ஆனந்தம் அடைந்து ஆனந்தநாயகி என்னும் பெயரைப் பெற்றார். தமிழகத்தின் ஒவ்வொரு திருத்தங்களும் வெவ்வேறு சிறப்பு வாய்ந்தவை. ஒரு தலம் கணவன் மனைவி பிணக்குகளை நீக்கும்; இன்னொன்று திருமணத் தடைகளை நீக்கும்; மற்றது இழந்த செல்வங்களை மீட்டு மீண்டும் வசந்த வாழ்வு தரும். ஆனால், இம்மூன்று பரிகாரங்களுக்கும் சேர்த்து ஒரே தலம்.

சக்தி பெரிதா சிவம் பெரிதா என்று திருவிளையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த போது சிவபெருமான் பசுவாக மாறி, பூலோகத்துக்கு வந்து விடுகிறார். நீண்ட நேரம் தேடி அலைந்தும் சிவனைக் காண முடியாத தேவி மிகவும் சோர்ந்து விடுகிறாள். சிவன் மீது கோபப்படுகிறாள். ஆனால் ஆதலையூரில் பசுவாகி வந்த சிவனைக் கட்டி வைத்து இருக்கிறார்கள். கட்டப்பட்டிரந்த பசுவின் துயரம் தாளாது அதனை அவிழ்த்து விடுகிறாள் பார்வதி தேவி. அப்போது அங்கே பசு மறைந்துவிட, சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினான் சிவபெருமான். கணவனைத் தேடியலைந்து கண்டடைந்து ஆனந்தம் அடைந்ததால் தேவியின் பெயர் ஆனந்த நாயகி. இவ்வாறு கணவனை கண்டடைந்து ஆனந்தம் அடைந்த தேவியை, பச்சை வஸ்திரம் சாத்தி வணங்கினால், கணவன்-மனைவிக்குள் இருக்கும் சிறு சிறு மனக்கசப்புகள், சண்டைகள், பிணக்குகள் நீங்கும்.

பாண்டவ சகோதரர்களில் ஒருவனான பீமன் குருஷேத்திரப் போருக்குப் புறப்படும் முன் போரில் வெற்றிபெறவும், சூதில் இழந்த செல்வங்களை மீட்கவும் வேண்டி இங்குள்ள சிவ பெருமானை வழிபட்டான்.  குரு ஷேத்திரப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் இழந்த ராஜாங்கத்தை மீண்டும் பெற்றார்கள். தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பொருளை இழந்தவர்கள், நிலங்கள் அபகரிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தாயக் கட்டைகளை வாங்கி உண்டியலில் செலுத்தி வழிபட்டால் இழந்த ராஜாங்கம் மீண்டும் கிடைக்கும். இப்போதே கோயிலைச் சுற்றி கறை வேட்டி கூட்டம் தான் களைகட்டி நிற்கிறது.ஸ்ரீ லட்சுமிநாராயணருக்கு தனி ஆலயம் இருக்கும் அரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். பொதுவாக சிவன் கோவில்களில், விஷ்ணு ஒரு சிறிய சன்னதியில் அல்லது கோஷ்டத்தில் இருக்கிறார். இறைவனின் இடது மடியில் தையர் அமர்ந்திருக்கும் ஒரு தனி ஆலயம் இங்கே உள்ளது. நாச்சியர்கோயிலைப் போலவே, இங்கேயும் ஒரு கல் கருடன் உள்ளது. 


காலை 6.00 மணி முதல் பகல் 10.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  நாகப்பட்டினம், நன்னிலம், கும்பகோணம் 

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×