தில்லையாடி





	


	



























	




 




	








 




5:12:46 AM         Thursday, April 16, 2026

தில்லையாடி

தில்லையாடி
தில்லையாடி தில்லையாடி தில்லையாடி தில்லையாடி தில்லையாடி
Product Code: தில்லையாடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                   தில்லையாடி, சரணாகட்சகர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம்  மாவட்டத்தில் திருக்கடையூரில் இருந்து  8 கி. மீ தொலைவில் உள்ளது. சாலையின் இடப்புறத்தில் கோயில் வளைவைக் காணலாம்.

இறைவன் : சரணாகட்சகர், சார்ந்தாரைக்காத்தநாதர்

இறைவி  :  பெரியநாயகி

தல விருட்சம் : வில்வம், வன்னி மரம்

தல தீர்த்தம் : சக்கர தீர்த்தம் 

தல சிறப்புகள் :  திருமாலும், நவக்கிரகங்களில் சனீஸ்வரனும் வழிபட்ட தலம்.

தல வரலாறு : விக்ரம சோழனின் ஆட்சிக் காலம். அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார். திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், தில்லையாடி திருக்கோயிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். அந்த மந்திரி சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான். மந்திரி மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது பேரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, ஈஸ்வரனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான். ஐந்து நிலை ராஜகோபுரமும், திருச்சுற்றும் கொண்டு கோயில் அமைந்துள்ளது. இறைவி தனி சன்னதியில் உள்ளார்.

காலை 5.00 மணி முதல் பகல் 8.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி 

அருகிலுள்ள  ரயில் நிலையம்   : நாகப்பட்டினம்

 பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×