அந்தணப்பேட்டை, அண்ணாமலை நாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் சாலையை யொட்டி தென்மேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.
இறைவன் : அண்ணாமலை நாதர்
உற்சவர் : சந்திரசேகரர்
இறைவி : உண்ணாமுலை அம்பாள்
தல தீர்த்தம் : திருக்குளம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : இக்கோயிலின் திருத்தேர் விசேஷ வடிவமைப்புடன், இந்து மத தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மர சிற்பங்களால் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு செல்ல இயலாதவர்கள் இத்திருக்கோயிலை வழிபடலாம். இக்கோயிலில் அம்பாள் பிரசவம் பார்த்ததாக ஐதீகம்.
கோவில் அமைப்பு : ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயிலின் வெளிச்சுற்றில் பரிவார தேவதைகள் காணப்படுகின்றனர். உண்ணாமுலையம்மன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார். மூன்று மாட அமைப்பு ராஜகோபுரம் கொண்ட கோயில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. சுவாமிக்கு இடது புறத்தில் உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. சுவாமிக்கு எதிரில் கொடிமரம், வலது புறமாக வந்தால் கன்னி மூலையில் கணபதி, மேல்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சுற்று பிரகாரத்தில் விநாயகர், காசிவிஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், ஜூரநாதர், நவக்கிரகங்கள், பஞ்சமூர்த்தி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, வடக்கில் சனிஸ்வரர், பைரவர் தனி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
சுகபிரசவம், நாள்பட்ட காய்ச்சல் போகவும், குழந்தைப் பேறு கிடைக்கவும் பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருக்கோயிலின் வடபுறம் மகா மண்டபத்தில் அமையப் பெற்ற ஜூரநாதருக்கு ரச சாதம் படைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகப்பட்டினம், திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை