நாகூர், நாகநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூரில் உள்ளது.
இறைவன் : நாகநாத சுவாமி
உற்சவர் : சந்திரசேகரர்-கல்யாணசுந்தரர்
இறைவி : நாகவல்லி அம்பாள்
தல தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
தல விருட்சம் : பின்னை மரம்
தல சிறப்புகள் : ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்ற திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்று, தில்லைக்கு நிகரான சிறப்புடையது. வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சி கொடுத்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்று, தில்லைக்கு நிகரான சிறப்புடையது. வைகாசி மாதம் பவுர்ணமி அன்று புன்னை மரத்தடியில் சுயம்பு லிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சி கொடுத்தது.
தல வரலாறு : நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் என அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனைகள் நிறைவேறியதும் எடைக்கு எடையாக தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். ஆனி மாத பவுர்ணமியில் சந்திரன் 10 நாட்களும், மாசி மாத பவுர்ணமியில் இந்திரன் 10 நாட்களும் கொடியேற்றி, தேரோட்டி தீர்த்தவாரிகள் நடத்தி பிரமோற்சவம் செய்து வழிப்பட்டு சிவபெருமான் திருவடி சேர்ந்தனர். அதே போல் மாசி மாத அமாவாசையில் நாகராஜன் 10 நாட்களும் கொடியேற்றி, பிரமோற்சவம் செய்து, ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடத்தினான். அன்று மகாசிவராத்திரி ஆகையால் காட்டில் வாழ்ந்து வந்த சம்புபத்தன் என்னும் அந்தணனின் ஐந்து வயது மகன் விளையாடிக் கொண்டிருக்கையில், பாம்புகளுக்கு அரசன் தன் மனைவியுடன் கூடி மகிழ்வதை சிறுவன் கண்டு விட்டானே என்று நாக அரசன், சிறுவனை கடிக்க அவன் இறந்து விடுகிறான். அந்தணன் தன் ஞான திருஷ்டியினால் உணர்ந்து, கோபமுற்று, நாக அரசனை சபித்தான். நீ நாகர் உலகை விட்டு நீங்கி, அறிவும், வலிமையும் நீங்கி தனிப்பட்டவனாய் , பூவுலக காட்டில் திரியக் கடவாய் என்று சபித்தான். நாக அரசன் நடுங்கி, அந்தணன் காலில் விழுந்து வணங்கி, செய்த தவறை உணர்ந்து, சாபம் நீக்க கேட்டான். ஆயிரம் ஆண்டுகள் சென்ற பிறகு உன் தந்தை காசிபரை காணும் போது சாபம் தீரும் என்றான் அந்தணன். அதன்படி நாகராஜர், தன் தந்தையை கண்டு வணங்கி சாபம் தீர, மாசி மாத மகாசிவராத்திரி நாளில் முதற்காலம் கும்பகோணம் வில்வ வனத்தில் உள்ள நாகநாத சுவாமியையும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் காலம் திருப்பாம்புறம் வன்னிவனத்தில் உள்ள நாகநாதரையும், நான்காம் காலம் புன்னாகவனத்தில்(நாகூர்) உள்ள நாகநாதசுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் நீங்கி முக்தி அடைந்துள்ளார்.
மகா சிவராத்திரி, பிரதோஷம் கார்த்திகை வழிபாடு, அர்த்த ஜாமபூஜை போன்ற திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. பிரம்மன், இந்திரன், சந்திரன், துர்வாசர், சப்தரிஷிகள், உருத்திரசன்மன், அந்தணன் ஆகியோரால் யுகங்கள் தோறும் வழிபடப்பெற்றது. நாகராஜரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாகதோஷ பரிகார தலம். இக்கோயிலின் தீர்த்தம் சந்திரனால் உருவாக்கப்பட்டதால் சந்திரதீர்த்தம் என பெயர் பெற்றது. இத்தீர்த்தத்தில் நீராடி சிரார்த்தம், தான, தர்மம் செய்தால் கயாவில் செய்த பலன் கிடைக்கும்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு