இளங்கடம்பனூர், சோழீஸ்வரமுடையார்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இளங்கடம்பனூர் எனும் கிராமத்தில் உள்ளது.
இறைவன் : சோழீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், சிவகாமி
இறைவி : சௌந்திரநாயகி
தல விருட்சம் : வன்னி
தல சிறப்புகள் : சோழி வடிவத்தில் மூலவர் சுயம்புமூர்த்தியாக இருப்பது சிறப்பாகும். பஞ்சகடம்ப தலங்களில் ஒன்றானது. முருகப்பெருமான் வீரகத்தி தோஷம் நீங்க பெற்ற தோஷ பரிகார தலம்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மூலவர் இடதுபுறத்தில் அம்மன் சன்னதி, வலம்புரி விநாயகர், சிவதுர்கை, சண்டீகேஸ்வரர், பைரவர், பிடாரி, நவகிரகங்கள், சனீஸ்வரன், சூரியன் ஆகியோர் தனி தனி சன்னதி கொண்டுள்ளனர்.பரிகார தோஷங்கள் நிவர்த்தியாக பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
தல வரலாறு : சூரபதம்பன் தேவர்களை துன்புறுத்த நான்முகன், நாராயணன் சிவபெருமானிடம் முறையிட நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் சிக்கலில் சக்திவேலை பெற்று செந்தூரில் அசுரர் கூட்டத்தை அழித்தார். அசுரர்களை அழித்த முருகனுக்கு வீரகத்தி தோஷம் ஏற்பட்டது.முருகப்பெருமான் வடதிசையில் பதரிவனத்தில் பதரிவனத்தில் தவமிருந்து பஞ்சலிங்க, துவாரலிங்க நிறுவி பூஜை செய்தார்.கடம்பவனத்தில் பாதாள கங்கையில் நீராடி கைலாசநாதர் திருமேனி நிறுவி வழிபட்டார்.அடுத்து சிவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி கங்காள நாதரை வழிபட்டார்.விசாலாட்சி சௌந்திர நாயகி உடன் சோழீஸ்வரர் நிறுவி வழிபட்டார்.
காலை 8.00 மணி முதல் பகல் 9.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகப்பட்டினம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை