நெற்குன்றம் , கரிவரதராஜ பெருமாள்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 10 கி.மீ., பெரம்பூர் பஸ், ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் மாதவரம் உள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வழியாக நாராயணா பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள சாலையில் சென்றால் பல்லவன் நகர் வரும் வெங்காய மண்டி பேருந்து நிலையத்திற்கு திரும்பும் சாலையின் முன் வலது புறத்தில் சிறிய தெருவின் கடைசியாக உள்ளது.
சுவாமி : கரிவரதராஜ பெருமாள்
தலச் சிறப்புகள் : இந்தப் பெருமாளின் முன்பாக நின்று பார்க்கும்போது, பெருமாளின் கண்கள் மூடியிருப்பது போல தோன்றும். கோவில் அர்ச்சகர் கருவறையின் மின்சார விளக்குகளை முழுமையாக நிறுத்தி விட்டு, நெய் விளக்கு ஆரத்தியை பெருமாளின் முகம் அருகே காட்டும்போது ஓர் அற்புதத்தை பக்தர்கள் காண முடியும். அதாவது ஆரத்தியை பெருமாளின் முகம் அருகே காட்டும்போது, கண் இமைகள் மெல்லத் திறந்து விழிகள் இரண்டிலும், ஆரத்தியின் ஒளிபட்டு பிரதிபலித்து, அந்த கணமே பெருமாளின் முகம் சிரிப்பது போல் தோன்றும். இது வேறு எந்தக் கோவிலிலும் காணக்கிடைக்காத அதிசயமாகும்.
தல வரலாறு : கரி என்றல் யானை, இவ் கோயிலின் புஷ்பகரணியிலிருந்து தினமும் தாமரை மலரை எடுத்து இந்த விஷ்ணு பக்த யானை பூஜை செய்துவந்தது. அவ்வாறு எடுத்து பூஜை செய்கையில் ஒரு நாள் குளத்தில் இருந்து பூவை பரித்தபோது பாரதராஜ் முனிவரின் சாபத்தை பெற்ற ஒரு முதலை இவ் யானை தீண்டினால் மட்டுமே சாப விமோச்சனம் பெறமுடியும் என்ற காரணத்தால் அவ் யானையின் பாதத்தை பற்றியது , யானையின் தும்பிக்கையில் புஷ்பமும் கால் முதலையின் வாயில் உள்ளதாலும் “ஆதிமூலமே ” என்று குரல் எழுப்பியது கூப்பிட குரலுக்கு வந்து நிற்கும் பெருமாள் இவர்களின் நிலையை கண்டு இவர்களுக்கும் விமோச்சம் கிட்ட தன் சக்கரத்ஆழ்வாரை பிரயோகனம் பண்ணினார், சக்கரத்தாழ்வார் இருவரையும் கரையில் கிடத்தினார் , யானை கரைக்கு வந்ததும் பலம் கிட்டியதும் முதலையை உதைத்தது உடனே முதலைக்கு சாப விமாரோச்சனம் கிட்டியது ,பெருமாள் யானைக்கு விமோச்சம் தந்து , பெருமாள் இருவருக்கும் மோட்சத்தை கொடுத்தார். இந்த பெருமாள் 27 நட்சத்திரங்களின் அதிபதி அதனால் பக்தர்கள் 27 ரூபாயை பெருமாள் காலடியில் வைத்து தொடர்ந்து 9 நாட்கள் அதிக பட்சமாக 9 வாரங்கள் வழிபட்டு வந்தால் வேண்டியது அப்படியே நிறைவேறுகிறது. தொடர்ந்து 27 மாதங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் இங்கு வழிபட்டால் தீராத தோஷங்கள் தீருகின்றன.
இங்குள்ள சந்தான கோபால கிருஷ்ணனும். சத்ய நாராயணனாக வீற்றிருக்கும் பெருமாளும் குழந்தை வரம் அருளுகிறார்கள். குழந்தை பேறு இல்லாதவர் சத்ய நாராயணா பூஜை நடத்துவது வழக்கம். இந்த பெருமாள் கோயிலில் ஒவ்வொறு பெளர்ணமி அன்றும் இந்த பூஜை நடை பெருகிறது. இங்குள்ள வராஹ ஆஞ்சநேயர் அதிசயமாக கோயில் அருகிலேயே கண்டெடுக்க பட்டவர் இந்த கோயில் 400 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் காலை 11 மணிக்கு கூட்டு பிராத்தனை நடைபெறுகிறது. தங்கள் கஷ்டங்களை எழுதி கொடுத்தால் அதை பெருமாள் பாதத்தில் வைத்து சகஸ்ர நாம பாராயாணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கு வரும் பக்தர் கள் எவ்வளவு பெரிய பாபத்தை செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து அருள வேண்டும் என தனி சந்நிதியில் அமர்ந்துள்ள பெருந்தேவி தாயார் வரம் பெற்றிருக்கிறார் அதனால் இந்த பெருமாள் அபய ஹஸ்த்த முத்திரையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம்செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.
கோவில் அமைப்பு : 1000 வருடங்களுக்கு மேற்பட்ட கோயில் ஆனால் இவ்வித ஆடம்பரங்களோ உயர்ந்த கோபுரங்களோ இல்லாமல் மிக சிறிய கோயில். உள்ளே நுழைந்தவுடன் ஆஞ்சநேயர் சன்னதியை காணலாம். மூலவர் கண்ணாடி அறையின் உள்ள ஸ்ரீ தேவி பூதேவியுடன் காட்சிதருகிறார் .
இங்குள்ள உற்சவர்கள் கரிவரதராஜ பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்ற திருப்பெயருடனும் சேவை சாதிக்கின்றனர். உற்சவரின் பெயரிலேயே ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல உற்சவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கிணறு தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டவர். புராணப் பெருமை வாய்ந்த இந்த ஷேத்திரம், கல் திருப்பணி ரீதியாக 1400 ஆண்டுகள் தொன்மையானது. காஞ்சீபுரம் சென்று வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்காக, இரண்டாம் நந்திவர்மப் பல்லவ அரசனால், இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போருக்குச் சென்றபோது இத்தலத்தில் தங்கியிருந்து, பெருமாளை வழிபாடு செய்த இவ்வரசன், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த ஆலயம் எழுப்பியுள்ளான்.
மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார். ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக்கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.
பெருமாளின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என பெரியோர் சொல்வர். ஆனால் கனகவல்லிக்கு இரண்டு திருக்கண்களுமே சந்திரன். கனகவல்லி தாயார், கருணையே பார்வையாகக் கொண்டவள். தன் பதியான கரிவரதராஜன் பக்தர்களிடம் காட்டும் கருணையை செயலாக்குபவள் இவள் தான். வரப்பிரசாதியான இந்தத் தாயாரை பத்து நிமிடம் தரிசித்தால், பெற்ற தாயிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
துன்பத்தில் இருப்பவர்களை அரவணைத்து அருள்பாலிக்கும் இந்தப் பிராட்டி, திருமணத்தடையை நீக்குவதோடு, புத்திர பாக்கியமும் அருள்கிறாள். தொடர்ச்சியாக 12 வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நீராஞ்சன தீபமேற்றி, மஞ்சள் மாலை சாற்றி வேண்டுவோருக்குத் திருமணம், குழந்தைப்பேறு வாய்க்கிறது. பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் ஏற்படுத்தியும், காணாமல் போன குழந்தை திரும்ப கிடைக்கச்செய்தும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். மனமுருகி வழிபடுவோருக்கு 21 நாளில் வேண்டுதல் நிறைவேறுகிறது.
இங்கு சுதர்சனாழ்வார், நரசிம்மர், தன்வந்திரி பகவான், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் முன்பு 21 அடி உயரத்தில் சுதைச் சிற்ப ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமை குங்குமார்ச்சனை, தை, ஆடி வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம், தமிழ் வருடப் பிறப்பு, திருமலைபோல் ஒரு நாள் போன்றவை இவ்வாலய முக்கிய விழாக்கள் ஆகும்.
இங்கு பெருமாளை தரிசிப்பதற்கு முன்பு, சுதைச்சிற்ப ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களான சேனை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரை வணங்கி, ஆண்டாள், கனகவல்லித் தாயாரை வழிபட்ட பின்பே கரிவரதராஜப் பெருமாளை வழிபடுவது முறையாகும்.
காலை 7.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்ட்ரல்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு