தாளக்கரை





	


	



























	




 




	








 




6:30:33 PM         Saturday, May 02, 2026

தாளக்கரை

தாளக்கரை
தாளக்கரை தாளக்கரை தாளக்கரை தாளக்கரை தாளக்கரை
Product Code: தாளக்கரை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    தாளக்கரை,  லட்சுமி நரசிம்மர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர்  மாவட்டம் அவிநாசி வட்டத்தில்  அவினாசி - புளியம்பட்டி மெயின் ரோட்டில் 14 கி.மீ தொலைவிலிருந்து வலது புறகிளை ரோட்டில் 3 கி.மீ தொலைவில் உள்ளது. 

சுவாமி :   லட்சுமி நரசிம்மர்

தல விருட்சம் : ஈச்சமரம் 

தல  தீர்த்தம் தெப்பம்

தலச் சிறப்புகள் : மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்ராமம் இருக்கிறது. இந்த சாளக்ராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை “ஆதிமூர்த்தி” என்கிறார்கள்.

தல வரலாறு : இரணியன் என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யன், தன்னை யாராலும் அழிக்க முடியாதபடி வித்தியாசமான வரம் பெற்றிருந்தான். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அப்போது அவர் மிக உக்கிரமாக இருந்தார். உக்கிரம் தணிக்க மகாலட்சுமி, அவரது மடியில் அமர்ந்தார். நரசிம்மர் சாந்தமானார். இதன் அடிப்படையில் இலட்சுமி நரசிம்மர் கோயில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பாள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறாள். நரசிம்மர், மகாலட்சுமியை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

பெருமாள் தலங்களில் சுவாமி, ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பார். சுவாமி நின்ற கோலத்தில் இருக்கும் தலங்களில், ஆதிசேஷன் அவருக்கு குடையாக தலைக்கு மேலே காட்சி தருவார். இங்கு பிரகாரத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். இவரது தலைக்கு மேலே, ஒரு தலையுடன் ஆதிசேஷன் குடையாக காட்சி தருகிறார். இவரை, “சர்ப்ப விநாயகர்” என்று அழைக்கிறார்கள். பெருமாளுக்கான கோயில் என்பதால் இவர் ஆதிசேஷனுடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இராகு, கேது, செவ்வாய் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக்கொள்கிறார்கள்.இக்கோயில் ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே தலம், “தாளக்கரை” என்று அழைக்கப்படுகிறது.
 
கோவில் அமைப்பு : நின்ற கோலத்தில் லட்சுமி அருட்பாலிக்கும் தலம். மகாலட்சுமியோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டவன் சந்திரன். இத்தலத்தில் சகோதர முறை கொண்ட சந்திரனே சுவாமிக்கு விமானமாக இருப்பதைப் போன்று வேறு எத்தலத்திலும் காண முடியாது. எனவே, சந்திர விமானம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது.

இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள பரிக்கல், பூவரசம் குப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களில் நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில் லட்சுமி நரசிம்மர் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார். நரசிம்மர் கோரை பற்களுடன் நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரமும் காலில் ஸ்ரீ சக்கரமும் இருந்தாலும் நின்ற கோலத்திலேயே நரசிம்மர் சாந்த சொரூபமாக உள்ளார். இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத் தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது. சாமியின் ஈசாணி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று வரை நீர் வற்றியதில்லை. இந்த குளத்திற்குள் தங்க தேர் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.

சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றிய இக்கோவிலில் நரசிம்மர் அருளால் தடைபடும். திருமணம், புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் துளசிமாலை, எலுமிச்சை கனி ஆகியவற்றை சுவாமியின் முன் வைத்து பிரார்த்தனை செய்தால் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது. சொர்க்கவாசல் வழியாக (பரமபதம்) பக்தர்கள் வருவது போல் இக் கோவில் அமைய பெற்று உள்ளது. பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது. 

பவுர்ணமி, அமாவாசை, ஏகாதசி, திருவோணம் மற்றும் பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. சுவாமி சன்னதி எதிரே கருடாழ்வார் வணங்கியபடி இருக்கிறார். சுவாமி சன்னதியில் எலுமிச்சை, துளசி பிரதான பிரசாதமாக தருகிறார்கள். இதனை வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கிட வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை. பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
 
காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மாலை  3.00 மணி முதல்  7.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் :  கோயம்புத்தூர்

அருகிலுள்ள ரயில் நிலையம் :  அவினாசி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×