செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா





	


	



























	




 




	








 




8:47:32 PM         Saturday, May 16, 2026

செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா

செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா
செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா
Product Code: செங்கன்னூர் பகவதி - மாவேலிக்கரை - கேரளா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

செங்கண்ணூர் பகவதி அம்மன்

திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில்  செங்கண்ணூர் எனும் ஊரில் அமைந்துள்ளது  பகவதி அம்மன் கோவில்.
சிறப்புகள் : இந்த செங்கண்ணுர் பகவதி க்ஷேத்ரம் ஒரு சக்திபீடக் கோவில். கோவிலில் உள்ள பகவதி அம்மனுக்கு மாதமாதம் மாதவிடாய் வருமாம். அதனால்தான் அந்த அம்மனை யாரும் ஒளிப் படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அஸ்ஸாமில் பார்வதிக்கு வருடம் ஒரு முறை மாதவிலக்கு. இன்றைய கேரளாவில் இருக்கும் செங்கனூர் பகவதி அம்மன் கோவில் கேரளாவில் இருக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தமிழருக்கானவைதான். 
வரலாறு : மிர்ரர் என்ற ஆங்கில இதழின் செய்தியாளர் இந்தக் கோவிலுக்கே சென்று தகவலையும் வெளியிட்டுள்ளார். தலைமைக் குருக்கள் மாத வன்நம்பூதிரி சொன்னாராம். பழைய நாள்களில் ஒவ்வொரு மாதமும் இந்த விக்ரகத்துக்கு மாதவிடாய் தவறாது வரும். தற்போது ஓராண்டில் மூன்று, நான்கு தடவைதான் வருமாம். இந்த மாதவிடாய் துணி பகிரங்கமாக ஏலம் விடப்பட்டு பெருந்தொகையை ஈட்டுவார். பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூறுகிறது.

பூப்புனித நீராட்டு விழா: கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூருகிறது. இந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது. பகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் த்ந்திரி ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். 

முக்கிய அர்ச்சகரான மேல்சாந்தி தினமும் பகவதியின் மீதுள்ள வெள்ளைத்துணியைக் களைந்து கருவறைக்கு வெளியே வைத்து விடுகிறார். ஆலயத்தில் பூமாலை தொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் வாரியர், அந்த ஆடையை எடுத்துப் பார்க்கிறார். அதில் சந்தேகத்திற்குரிய கறை பட்டிருந்தால், அதை ஆலய அலுவலகத்தில் சேர்க்கிறார். கோயில் நிர்வாக அதிகாரி அந்த் ஆடையை த்ந்த்ரியின் இல்லத்திற்கும், வஞ்சிப்புழ மடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். அங்குள்ள வயதான பெண்மணிகள் அதைப் பார்வையிட்டு திருப்பூத்து ஆகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால் அந்த ஆடையை மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பக்தர்களின் பார்வைக்காக மூன்று நாட்கள் வைக்கப்படுகிறது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது.


ஒரு நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை சேதமடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக பஞ்சலோக சிலை ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனின் சக்தி குறைந்து போய்விட்டது. சிறப்புப் பூஜைகள் பல செய்து சக்தி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்வு நின்று போய், ஒழுங்கு நியதிகளுக்கு உட்படாமல் குறிப்பிட்ட வரையறை இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என மாற்றமடைந்து போய்விட்டது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது.
பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவதியின் திருப்பூத்து ஆடை வேண்டி கோயிலில் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் முன்னுரிமையுடையவருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த உடைக்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் கட்டணம் பெறப்படுகிறது. மூணுநாள் இப்படி வேறொரு அறையில் தங்கிய அம்மனை நாலாம் நாள் அருகில் உள்ள ஆற்றுக்குக் கொண்டுபோய் நீராட்டி அலங்கரிச்சு யானை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு வந்து அம்மனின் சொந்த இடத்தில் கருவறையில் மீண்டும் வைக்கிறாங்க. இளம் கன்னியர் பூப்பெய்ததும் நடக்கும் விழா போலத்தான். அம்மன் மீண்டும் கோவிலுக்குள் வரும் சமயம், சிவன் வாசலில் நின்று வரவேற்று, பிரகாரங்களில் இருவரும் ஊர்வலமாகப்போய் பின்னே தனி சந்நிதிகளுக்குப் போயிருவாங்களாம்.  இந்தியாவில் வேறெங்கும் இப்படி ஒரு விழா நடப்பதே இல்லையாம். 
இந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது.

பகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். சிலப்பதிகாரம் செங்குட்டுவன் காலத்து மலையாள பூமி. இந்தப் பகவதி அம்மன் கோவில் தீட்டுத்துணி ரொம்பவும் பிரசித்திப் பெற்றது. 
சக்தி பீடம் : அம்பத்தியோரு துண்டுகளா வெட்டப்பட்ட சதியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களைத்தான் சக்தி பீடம்.  சதியின் அடிவயிற்றுக்குக் கீழே உள்ள அரைப்பகுதி விழுந்த இடம் இது. அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா கோவிலையும் இப்படி இதே பாகம் விழுந்த இடமுன்னுதான் சொல்றாங்க. உடலைத் துண்டாக்கி எறியப்பட்ட போது இடுப்பின் கீழுள்ள அரைப்பகுதி இங்கேயும் அஸ்ஸாமிலுமா அரை அரையா விழுந்துச்சு.
இந்த பகவதிதான் சிலப்பதிகாரத்துக் கண்ணகி என்பவர்களும் உண்டு. மதுரை மாநகரை தீக்கிரையாக்கிட்டு அங்கிருந்து விடுவிடுன்னு நடந்து இங்கே வந்து இந்தச் செங்குன்றுமேல் ஒரு மரத்தடியில் நின்னு தவம் செய்தாள். அப்பதான் கோவலன், இந்திரனுடைய புஷ்பக விமானத்தில் வந்து அவளை தேவலோகம் கொண்டு சென்றான்.  
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்

அருகிலுள்ள விமான நிலையம் : கொச்சின் 95 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : செங்கண்ணூர்
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×