சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி 





	


	



























	




 




	








 




2:08:04 AM         Sunday, May 03, 2026

சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி

சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி
சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி
Product Code: சூரியனார் கோயில் - திருமங்கலக்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருமங்கலக்குடி

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் திருமங்கலக்குடி அமைந்துள்ளது. நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் திருமங்கலக்குடி. இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. 

இறைவன் பெயர்: மூலாவராக பிராணவரதேஸ்வர் 
இறைவி பெயர் : மங்களநாயகி, மங்களாம்பிகை
தல விருட்சம் : வெள்ளெருக்கு
இத்திருத்தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என " பஞ்ச மங்கல ஷேத்ரமாக" வழிபடப்படுகிறது.. 
சிறப்புகள் :பிராண வரதேஸ்வரரும், மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருமங்கலக்குடி என்றும், நவக்கிரக நாயகர்கள் தனி சன்னதிகள் கொண்டு அருளும் தலம் " சூரியனார் கோவில் " என்றும் வழிபடலாயிற்று. 
சூரியனார் கோவில் வழிபாட்டை திருமங்கலக்குடியில் இருந்துதான் துவங்க வேண்டும். நவக்கிரக வழிபாட்டில் முதல் தலமாக விளங்குவது திருமங்கலக்குடி.
கோவில் அமைப்பு:  இக்கோவில் விமானம் மங்கள விமானம், இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது. கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும் மற்றொருவர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருகின்றனர்.
இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்.  மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 12 ஞாயிற்றுக் கிழமைகள் தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் தயிர் சாதம் பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் தயிர்சாதம் அன்னதானம் செய்வதால் அஷடமச்சனி, 7 1/2 ஆண்டுச்சனி, தசாபுக்தி தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும். மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீரக்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிவாள். மேலும் இத்திருக்கோவிலுள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தியாகும்.
தலபெருமை : நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் என்பவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழுநோய் தாக்காதிருக்க வரமும் அளித்தனர். நவகிரங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார்.  நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரங்களுக்கு தொழுநோய் எற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார். பின்பு நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில்) கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின் திங்களன்று காவிரியில் நீராடி பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர். நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்குத் தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டும்

சூரியனார் கோவில்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது.ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. 
இறைவன் : ஸ்ரீ சிவசூரியநாராயணமூர்த்தி 
இறைவி : சாயாதேவி,உஷாதேவி 
தீர்த்தம் : சூர்யப்புஷ்கரணி  
ஸ்தலவிருக்ஷ்ம் : வெள்ளெருக்கு 
சிறப்புகள் : மற்ற நவக்கிரக கோவில்கள் அணைத்திலும் சிவபெருமானே மூலவராக இருக்க, இங்கு மட்டும் சூரிய பகவான் முக்கிய கடவுளாக காட்சியளிக்கிறார்.  சூரிய பகவான் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப்புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது. சனிக்கிரகத்தால் பாதிப்படைந்தவர்கள் சூரியனார் கோவில் சென்று வழிபடுதல் வேண்டும். சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்சித்து கோதுமையை நிவேதித்து ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொள்வது நலம்.
சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கண் கோளாறுகளும் நீங்கி அருள்பெற்றுச் செல்வது இந்தத் தலத்தின் சிறப்பு. மேலும், இந்தத் தலத்தின் விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். தீராத தோல் நோயும் தீரும் என்பது நம்பிக்கை. 
தல வரலாறு: இதுவரை கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கி.பி 1060 - கி.பி.1118 கட்டப்பட்டிருக்கலாம். முதலில் இக்கோவில் அர்காவனம் என்று அழைக்கப்பட்டு பின்னரே சூரியனார் கோவில் என்று மாறியது.
சிவன் தனது கையிலிருந்த திரிசூலத்தைக் கொண்டு ஒன்பது புனித நீர் நிலைகளை உருவாக்கினார். அந்நீர் நிலைகளில் புனித நீராடி அன்போடு வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களின் அருள் கிடைக்கும். சூரியன் தலைமையில் அனைவரும் மேற்கொண்ட தவத்தால் அங்கே அனைவருக்கும் கோவில் உண்டாகும். மேலும், சூரியனார் கோயில் என்ற பெயரையே இந்த ஊரும் வழங்கி வருமாறு அருள் புரிந்தார்.
தல அமைப்பு :இத் திருக்கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற்புறமும் நெடுமதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக சூரிய தேவன்  இடப் புறம் உஷாதேவியுடனும், வலப் புறம் சாயாதேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர். நினைத்த காரியங்களை நிறைவேற்றி தருபவர். கண், இருதய மற்றும் காமாலை நோய்களை தீர்ப்பவர். ஏழரை, அஷ்டம மற்றும் ஜென்ம சனி திசை நடப்போரும், மற்ற நவக்கிரக தோஷமுள்ளவர்களும் இத் தல நாயகனை வழிபட வேண்டும். 
பரிதி, அருக்கன், ஆதித்தன், பானு, ஞாயிறு, பகன், கனலி, கதிரவன், கமலநாயகன், வெங்கதிரோன், வெய்யோன், மார்த்தாணடன், தினகரன், பகலவன் என பல்வேறு பெயர்களுடன் போற்றப்படும் சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சிவனது முக்கண்ணில் வலது கண்ணாக திகழ்பவர். புகழ், மங்களம், கீர்த்தி, செல்வாக்கு, ஆட்சி திறம் போன்றவற்றை அளிப்பவன். சூரிய தசா புத்தி நடப்பவர்கள், சூரிய பகவானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொள்வதாலும், மாணிக்கத்தை அணிவதாலும், ஞாயிற்று கிழமைகள் விரதம் இருப்பதாலும், சிவப்பு நிற பசு மற்றும் தானியங்களை தானம் செய்வதாலும், சூரிய நமஸ்காரம் மற்றும் சூரியனார் கோவில் வழிபாட்டாலும் கிரக தோஷ நிவர்த்தி பெறலாம்.

சூரியனார் கோவில் வழிபாடு : மற்ற ஆலயங்களை போலல்லாது, இத் திருத் தல வழிபாடு சற்றே வேறுபட்டது. வழிபாட்டு முறை அறிந்து வணங்குதல் மிகச் சிறந்த பலன் அளிக்கும். சூரியனார் கோவிலை வழிபடுவதற்கு முன்னர் அருகில் உள்ள " திருமங்கலக்குடி " சென்று " பிராணவரதரையும் ", அம்மனையும் வழிபட வேண்டும். பின்னர், சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோபுர தரிசனம் செய்து, கொடி மரம் வணங்கி, கோள் தீர்த்த விநாயகரை வீழ்ந்து வணங்க வேண்டும். பின்னர், நடராஜரையும், சிவகாமியையும், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு, மூலவாராய், தன் இரு தேவியருடன் காட்சி அருளும் சூரிய பகவானை நைவேத்யம் வைத்து, அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்க வேண்டும்.அதன் பிறகு, வெளிப் பிரகாரம் வந்து, முறையே குரு பகவானையும், நெய் தீபம் கொண்டு சனீஸ்வரனையும், புதனையும், அங்காரகனான செவ்வாயையும், சந்திரனையும் பின்னர் கேதுவையும் மலர்களால் அர்சித்தும், அர்ச்சனைகள் செய்தும் வணங்க வேண்டும். கடைசியாக சுக்கிர பகவானையும் , ராகுவையும் வழிபட வேண்டும். மீண்டும் விநாயகரிடம் வந்து அவரை துதித்து, கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு பிரகாரம் வழியாக கோவிலை 9 முறை இடமாக வர வேண்டும். வழிபாட்டின் பூர்த்தியாக விநாயகரை மீண்டும் வீழ்ந்து வணங்கி வெளிப்புறம் சென்று அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யலாம்.


தரிசன நேரம்: காலை 7.00 முதல் பகல் 12.30 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரையிலும் ஞாயிறன்று காலை 5.30 முதல் பகல் 1.30. வரை, மாலை 3.30 முதல் இரவு 8.30 வரையிலும் கோவில் திறந்திருக்கும்.மேலும் இங்கு 12 ஞாயிற்றுக்கிழமைகள் தங்கி வழிபடுவது சிறப்பு. 

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 123 கி.மீ  

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஆடுதுறை 2 கி.மீ 
பேருந்து வசதி : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×