விந்திய மலை- விந்தியவாசினி
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிர்சாப்பூர் மாவட்டத்தில் 8 கி.மீ தொலைவில் விந்தியாஞ்சல் என்னும் சிறுநகரத்தின் காவல் தெய்வமாக விந்தியவாசினி தேவி விளங்குகிறாள்.
தல சிறப்பு : சிங்கத்தின் மேல் அமர்ந்த வாக்கில் அருள் பாலிக்கும் தேவியின் சிலையை பெருமை வாய்ந்ததாகும். இச்சிலை கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது. விந்திய மலையின் முகடு அங்கே இருப்பதாகவும், ஒரு காலத்தில் மிகப்பெரிய மனித பலிபீடமாகவும், காளி வழிபாட்டு தலமாகவும் இருந்ததாம். இன்றும் பெரிய யாகக்குண்டம் அமைந்துள்ளது. வேதசாஸ்திரங்களின் படி, இவர் துர்கா தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். அவரது ஆசனம் முக்கிய ஷக்திபீடங்களுள் ஒன்றாக இந்து பக்தர்களால் போற்றப்படுகின்றது. உள்ளூர்வாசிகளால் கஜாலா தேவி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறாள்.
தல வரலாறு : புனிதமான கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள விந்தியாஞ்சல், இந்து காவியங்கள் மற்றும் வேதசாஸ்திரங்களின் படி, இது துர்க்கா தேவியின் உறைவிடமாகக் கருதப்படுகிறது. போற்றுதலுக்குரிய தெய்வமாகிய துர்க்கை, மஹிஷாசுரா என்ற அரக்கனை வதம் செய்த பின் விந்தியாஞ்சலை தன் வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விந்தியாஞ்சல் அதன் புகழியின் உச்சியில் இருந்த போது, பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைக் கொண்டிருந்திருக்கிறது. இவை யாவும் முகாலயப் பேரரசரான ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தின் போது அழிக்கப்பட்டு விட்டன. காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள காளிக்கோ என்ற புராதனக் கோயிலையும் இங்கு காணலாம். புராணங்களின் படி, ராமபிரானால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ராமேஷ்வர் மஹாதேவ் கோயிலுக்கும் சென்று வரலாம். கிருஷ்ண பகவானின் வளர்ப்புத் தாயான யஷோதாவின் மகள், அஷ்டபுஜா தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள அஷ்டபுஜா தேவி கோயிலும் இங்கு உள்ளது.
கோயில் அமைப்பு : இங்கு சப்தஷ்ஸ்தி மண்டபம் என்றழைக்கப்படும் விதானத்தில், துர்க்கா தேவியைத் துதிக்கும் ஸ்லோகங்கள் அடங்கிய புனிதத் தொகுப்பான துர்க்கா சப்தஷ்ஸ்தியிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணலாம். மேலும், ஏராளமான சிவலிங்கங்கள் மற்றும் தம்த்வஜா தேவி, டெவில்வ் புஜா தேவி, மாகாளி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள பல கோயில்களையும் இக்கோயில் வளாகத்தில் காண முடிகிறது.
அழகிய நந்தவனம் சூழ இருக்கும் சீதாமாட்டியில்தான், சீதை தன் இறுதிக்காலத்தில் பூமி பிளந்து, தனது அன்னையான பூமாதேவியுடன் இணைந்தாராம். இரு தளங்களாக அமைந்துள்ள இக்கோயிலின் மேல் தளத்தில் சீதை மணக்கோலத்திலும், கீழ் தளத்தில் சமாதி நிலையான பூமி பிளந்து போகும் சிற்ப கோலத்திலும் காட்சி தருகிறார். சீதையை தரிசிக்கும் முன் அங்கிருந்து பார்த்தாலே தெரியும் பிரமாண்ட ஆஞ்சநேயரையும் தரிசித்து வரலாம். ராமாயண காலத்தைச் சேர்ந்ததான, சீதைக்கென அர்ப்பணிக்கப்பட்ட குளமான சீதாகந்த் உள்ளிட்ட பல்வேறு ஈர்ப்புகள் விந்தியாஞ்சலில் காணப்படுகின்றன.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 4.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : வாரணாசி 70கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : மிர்சாப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு