நைமிசாரண்யம் - லிங்கதாரிணி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் நைமிசாரண்யம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் லக்னோவிலிருந்து 70 கி. மி., தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : தேவராஜன், ஸ்ரீஹரி
இறைவி : ஸ்ரீஹரிலட்சுமி, லிங்கதாரிணி
தீர்த்தம் : சக்ர தீர்த்தம், கோமுகி நதி, நேமி தீர்த்தம், திவ்ய தீர்த்தம், விச்ராந்த
பாடல் பாடியவர் : திருமங்கையாழ்வார்
சிறப்புக்கள்: இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
தல வரலாறு: இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று. வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு.
கோவில் அமைப்பு : இங்கே அனுமனின் பிள்ளையாகக் கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. இங்கிருந்து கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள். இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு. சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும்.
தல பெருமை : ஒருமுறை, முனிவர்கள் பிரம்மாவை அணுகி, அமைதியாக 12 ஆண்டுகள் தவமிருந்து மாபெரும் வேள்வி செய்ய ஏற்ற தொரு இடத்தைத் தங்களுக்குக் காண்பித்தருள வேண்டும் என வேண்டினர். அப்போது பிரம்மா ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து, சக்கர வடிவில் வளைத்து அதனை உருட்டி விட்டு, 'இந்தச் சக்கரம் எங்கு போய் நிற்கிறதோ, அதுவே நீங்கள் விரும்பிய இடம்'' என்றாராம். அந்தச் சக்கரம் நின்ற இடம் தான் இந்த நைமிசாரண்யம்.அனுமன் அசுரர்களைக் கொன்று, ராம லட்சுமணர்களைத் தோளில் சுமந்து வந்தாராம். அப்போது அவர் வந்த இடம்தான் நைமிசாரண்யம்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் , மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்..
அருகில் உள்ள விமான நிலையம்: லக்னோ
அருகிலுள்ள ரயில் நிலையம் : நைமிசாரண்யம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு