கௌஹாத்தி - அஸ்ஸாம்





	


	



























	




 




	








 




8:07:52 PM         Thursday, April 30, 2026

கௌஹாத்தி - அஸ்ஸாம்

கௌஹாத்தி - அஸ்ஸாம்
கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம் கௌஹாத்தி - அஸ்ஸாம்
Product Code: கௌஹாத்தி - அஸ்ஸாம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கெளஹாத்தி  காமாக்யா கோவில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நீலாச்சல் மலைச் சாரலில் 12 கி.மீ தொலைவில் எழிலுற அமைந்துள்ளது 'காமாக்யா' சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் கூறுகின்றது.

மூலவர் : காமாக்யா
தீர்த்தம் : பிரம்மபுத்திரா 
பீடம் : காம கிரி  

சிறப்புக்கள்: அன்னையின் இந்த யோனி பாகம் விழுந்த பீடம் படைப்பாற்றலைக் குறிக்கும். மிகவும் இருண்ட கர்ப்பக்ரஹத்தில் தானாக மேலெழும்பும் நீரூற்று வடிவத்தில் அம்பாள் உக்ர தேவதையாக அருளாட்சி நடத்துகிறாள். பக்தர்களுக்கு அந்தப் புனித நீரே தீர்த்தமாக வழங்கப்படுகிறது. அம்பிகைக்கு இத்தலத்தில் திருவுருவம் கிடையாது. மாறாக கருவறையில் யோனி வடிவ கற்பீடத்தில் அன்னை கோயில் கொண்டருள்கிறாள். இப்பீடத்தில் இயற்கையாகவே சிறு நீரூற்று பொங்கிப் பிரவகிப்பது அற்புதக் காட்சி.
கோவில் அமைப்பு  : நீலாச்சல் மலைப்பகுதியில் மஹாவித்யாக்கள் என அழைக்கப்படும் காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஷ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகுளாமுகி, மாதங்கி, கமலா ஆகிய பத்து தேவிகளுக்கும் கோவில்கள் உண்டு. இவற்றில்,  திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய தேவியர்களுக்கு மா காமாக்யா கோவிலின் உள்ளேயே தனிக் கோவில்கள் இருக்க, மற்ற ஏழு தேவியர்களுக்கும் கோவில்கள் நீலாச்சல் மலைப்பகுதியில் இருக்கின்றன. கோவிலின் வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிலைகளில் பல சிதிலப்பட்டு இருந்தாலும், இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. நவிக்கிரக கோவில்களும், சூரியனுக்கு தனி கோவில் அமைந்து உள்ளது. 


யோனிமண்டல வடிவமாக விளங்கும் இத்தலம் தல ரத்தினமாக விளங்குகிறது. இதை விட சிறந்த தலம் பூவுலகம் எங்கிலுமில்லை. இங்கு சகல தேவதைகளும் மலை வடிவில் எழுந்தருளி உள்ளனர். இத்தலத்தின் எல்லை முழுவதுமே தேவியின் திருவுருவமாக விளங்குகிறது.

நவராத்திரி சமயத்திலும், திருவிழா சமயங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இங்கே வருவது வழக்கம்.  அம்புபச்சி மேளா எனும் திருவிழா இந்த காமாக்யா கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிலக்கு நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. நாடெங்கிலும் இருந்து தந்திரிக் யோகிகள் இந்த திருவிழாவின்போது அதிகம் விஜயம் செய்கின்றனர். துர்க்கா பூஜா மற்றும் மானஷா பூஜா ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. ஹிந்துக்கள் மட்டுமே இந்த காமாக்யா கோயிலில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். விழாவின் முதல் மூன்று நாட்கள் ஜகன் மாதாவான அன்னைக்கு வருடாந்தர விலக்கு தினங்களாக கருதப்படுகிறது. அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

நான்காம் நாள் ஆலயம் திறக்கப்பட்டு அம்பிகையை நன்னீரால் அபிஷேகம் புரிந்து ஆராதித்து மகிழ்வர். நாடெங்கிலுமிருந்து பல லட்சம் பக்தர்கள் விழாவையும் அம்பிகையையும் தரிசிக்கக் கூடுவர். கண் கொள்ளாக் காட்சி. இத்தலத்தில் புரியப் படும் ஜபம், தவம், யோகம், இவை விரைவில் சித்தி பெறுகின்றன. பரம ரகசியமான இத்தலத்தில் பிரார்த்தனைகள் விரைவில் பலனளிக்கும்.
தல வரலாறு  : பாண்டவர்கள் இத்தல தேவியைப் போற்றித் துதித்து வழிபட்டுள்ளனர் என்று மகாபாரதம் உத்யோக பர்வம், துரோண பர்வம் குறிக்கிறது. மேலும் காளிகா புராணம், காமக்யா தந்திரம், யோகினி தந்திரம், திரிபுரா ரகசியம் ஆகிய அரிய நூல்களும் யோனி பீடத்தின் சிறப்பினைப் பேசுகின்றன. இந்த இடம் நரகாசூரனால் ஆளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி, அனுமன், புலி, சிங்க வாயில் ஆகிய நுழை வாயில்களை அமைத்து இருந்தான்.

எவ்வுயிர்க்கும் தாயான காமாக்யா தேவிக்கு ஆலய வளாகத்திற்கு உள்ளேயே பிராணிகளைப் பலியிடும் தவறான பழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. 
இங்கு செல்ல பல வழிகளிலும் வசதி உள்ளது. ஹோட்டல் வசதிகளும் உள்ளது. ரயிலில் சென்றால் நேரடியாக நீலாச்சல் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம். 600 படிகள் ஏறியோ அல்லது பேருந்தில் 3 கி.மீ பயணித்தோ மலைக்கோவிலை அடையலாம்.
நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,  மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும்  திறந்து இருக்கும்.

அருகில் உள்ள விமான நிலையம் :  கெளஹாத்தி  16 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : காமாக்யா ஜங்ஷன் 3 கி.மீ 
  
பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×