மூகாம்பிகை - கர்நாடகம்





	


	



























	




 




	








 




2:07:17 AM         Sunday, May 03, 2026

மூகாம்பிகை - கர்நாடகம்

மூகாம்பிகை - கர்நாடகம்
மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம் மூகாம்பிகை - கர்நாடகம்
Product Code: மூகாம்பிகை - கர்நாடகம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மூகாம்பிகை கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. மங்களூரில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், உடுப்பியில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது 
மூலவர் : மூகாம்பிகை
தீர்த்தம் : அக்னி,காசி சுக்ல ,மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு 
பாடியவர் : ஆதி சங்கரர் 
தல சிறப்பு : இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. துர்கா தேவி அல்லது சரஸ்வதி அர்ப்பணிக்கப்பட்ட கோவில். மாலையில் மகா காளி (சக்தி தெய்வம்), மகா லட்சுமி (செல்வத்தின் தெய்வம்) மற்றும் மகா சரஸ்வதி (ஞான தேவியர்) போன்ற மூன்று வெவ்வேறு வடிவங்களில் அவர் வணங்கப்படுகிறார். பசுமை படர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் பத்மாசனத் திருக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீரவாள், ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு, வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது.
மூன்று கண்கள், நான்கு கைகள், அந்தக் கரங்களில் சங்கு, சக்கரத்துடன் அபய, வர 
முத்திரைகளை ஏந்தி அன்னை மூகாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலித்து 
வருகின்றாள். 
தல வரலாறு:  முன்னொரு காலத்தில் கம்ஹாசுரன் என்கிற அரக்கன் ஒருவன் இருந்தான். குடிமக்களுக்கும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்த அவன், சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தான். சாகாவரம் வேண்டி அவன் தவம் இருப்பதை அறிந்த பராசக்தி, அவன் வரம் பெறுவதற்கு முன்பே, அவனை (மூகன்) ஊமையாக்கி விட்டாள். இதனால் அவன் ‘மூகாசுரன்’ என்று அழைக்கப்பட்டான். இந்த அசுரனை வதம் செய்ததால் அம்பிகை, ‘மூகாம்பிகை’ எனப் போற்றப்படுகிறாள்.
கொல்லூர் பகுதியில் கம்ஹாசூரன் என்ற அரக்கனின் தொல்லைகளிலிருந்து மக்களை காக்க, பார்வதி தேவி, அவ்வரக்கனை கொன்று மக்களை காத்தார். இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார். 
ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். 
மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு. சௌபர்ணிகை ஆற்றின் கரையில் விநாயகர் கோயில் உள்ளது. இந்த ஆற்றில் நீராடி, விநாயகரை வழிபட்டுத்தான் அம்பிகை கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் வழியில், ஒரு காளி கோயில் உள்ளது. இந்தக் காளி கோயிலினுள்ளே, ஆறு அடி உயரமுள்ள புற்று காணப்படுகின்றது. இக் காளிதேவியையும் வணங்கி, கீழ்த்திசையை நோக்கிச் சென்றால், அன்னை மூகாம்பிகை திருக்கோயிலின் மேற்கு வாசலை அடையலாம். இக் கோபுர வாசல் எப்போதும் மூடப்பட்டிருக்கும். இந்தக் கோபுர வாசலின் வழியாகவே, ஆதி சங்கரர் முதன் முதலில் திருக்கோயிலுக்குள் நுழைந்து  அம்பிகையைத் தரிசனம் செய்து, தியானம் செய்தார். இந்தப் புனிதத்துவத்தைக் காக்கவே இந்த வாசல் எப்போதும் மூடப்பட்டிருப்பதாக ஐதீகம். 

கோயில் அமைப்பு : இக்கோயிலின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், முன் மாடம் அமைந்துள்ளது. அதைக் கடந்து சென்றால், கம்பீரமாக நின்று அருள் புரியும் வீர பத்திரரைத் தரிசிக்கலாம்.  கோயிலின் தெற்குப் பிராகாரத்தில், பத்துத் திருக்கரங்களுடன் விநாயகப் பெருமான் மூஞ்சூறு வாகனத்தின்மீது காட்சி தருவதைப் பார்க்கலாம். தென் கிழக்குப் பகுதியில், இரண்டு நாக உருவில் சுப்பிரமணியர், தென் மேற்கு மூலையில், சந்திர மௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பஞ்சமுக கணபதி முதலிய பல சந்நிதிகள் காணப்படுகிறன. 
திருக்கோயிலின் கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை தேவி தனது
இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, அருள் பொங்கக் காட்சியளிக்கின்றாள்.
இக் கோயிற் கருவறையின் விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டுப் பிரகாசமாகக் காட்சியளிக்கிறது. கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை திரு உருவச் சிலையின்  முன்னே காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும்  இணைந்திருப்பதை உணர்த்துவதுபோல், ஒரு தங்க ரேகையால் இரு பிரிவுகளாகப்  பிரிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற சுயம்பு லிங்கத்தை உலகில் வேறு எத்தலத்திலும் காண முடியாது. உச்சி வேளையின்போது, சூரியனின் ஒளிக் கதிரைக் கண்ணாடிமூலமாகப் பிரதிபலிக்கச் செய்து, அந்த ஒளி லிங்கத்தின்மேல் விழ வைக்கும்போது, பக்தர்கள் அந்தத் தங்க ரேகை பளிச்சிடுவதைப் பார்த்துப் பரவசமடைகின்றார்கள். 

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் மதியம் 1.30 வரையிலும்  மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் :  மங்களூர் 60 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : குண்டபுரா 40 கி.மீ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×