242. திருக்குரங்கணின்முட்டம்





	


	



























	




 




	








 




12:45:56 PM         Tuesday, May 26, 2026

242. திருக்குரங்கணின்முட்டம்

242. திருக்குரங்கணின்முட்டம்
242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம் 242. திருக்குரங்கணின்முட்டம்
Product Code: 242. திருக்குரங்கணின்முட்டம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                  வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கனில் முட்டம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு, வந்தவாசி  செல்லும் பாதையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள 'தூசி' என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து 2 கி.மீ. கிழக்கு நோக்கிச் சென்றால் இக்கோயிலை அடையலாம். கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது.

சுவாமி : வாலீசுவரர்,  கொய்யாமலை நாதர்

அம்பிகை : வளையம்மை

தலமரம் : இலந்தை

தீர்த்தம் : காக்கை தீர்த்தம் (காக்கை மடு)

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.  வாலி -  குரங்கு உருவிலும், இந்திரன் - அணில் உருவிலும், எமன் - காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதாலும் இத்தலம் 'குரங்கணில் முட்டம்' என்ற பெயரைப் பெற்றது. மூன்றின் உருவங்களும் சுதையால் ஆலயவாயில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பின்பு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இறைவன் சிறிய லிங்க உருவில் மேற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். கருவறையும் மிகச் சிறியதாக உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம் காக்கை தீர்த்தம் (காக்கை மடு) இது எமன் ஈசன் பூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியை குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.

இங்கு விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, துர்க்கை, பிரம்மன், திருமால், பைரவர், நால்வர், சப்தமாதர்கள், நவக்கிரகங்கள், சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன.

வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால் இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது. இறைவனை வழிபடும் நிலையில் இம்மூன்றின் உருவங்களும் புடைப்புச் சிறபமாக ஆலயவாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பினபு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இறைவன் சிறிய லிங்க உருவில் மேற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். கருவறையும் மிகச் சிறியதாக உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இத்தலத்தின் தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் காக்கை தீர்த்தம் (காக்கை மடு). இது எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு: மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர்,சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×