256. திருவொற்றியூர்





	


	



























	




 




	








 




10:13:39 AM         Tuesday, May 26, 2026

256. திருவொற்றியூர்

256. திருவொற்றியூர்
256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர் 256. திருவொற்றியூர்
Product Code: 256. திருவொற்றியூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில தலைநகரான  சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக இத்தலம் விளங்குகிறது.  பாரிமுனை பகுதியிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

சுவாமி : ஆதிபுரீசர்,  படம்பக்க நாதர், எழுத்தறியும் பெருமான்,   தியாகராஜர்,  புற்றிடங்கொண்டார், 
                 ஆனந்தத் தியாகர்,  வன்மீகநாதர்.

அம்பிகை : திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை தென்திசைநோக்கி நின்ற   திருக்கோலம்.

தலமரம் : மகிழ மரம், அத்தி

தீர்த்தம் : பிரம தீர்த்தம், காசி தீர்த்தம்

பதிகம் :  திருநாவுக்கரசர் - 5,   திருஞானசம்பந்தர் - 1,   சுந்தரர் - 2

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் 'ஆதிபுரி' என்று அழைக்கப் பெறும் தொன்மையான ஊர்.  இப்பகுதியில் பட்டினத்து அடிகள் கடைசியாக வாழ்ந்த தலம். சுந்தர மூர்த்தி சுவாமிகள் சங்கிலிநாச்சியாரை இறைவன் திருவருளால் இப்பகுதியில்தான் திருமணம் செய்து கொண்டார்.  63 நாயனாருள் கலிய நாயனாரின் திரு அவதாரத் தலமாக விளங்குகிறது.  27 நட்சத்திரங்கள் சிவபெருமானைப் பூசித்துப் பேறு பெற்ற தலம் ஆகும்.  இங்குள்ள வட்டப்பாறையம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவர் பாடல்களையும் சேர்த்து 8 பதிகங்கள் பெற்ற தலம்.

கடற்கரையில் இனிது விளங்கும் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு, அயோத்தியின் மன்னனாக இருந்த மாந்தாதா என்னும் மன்னன் பல அரிய திருத்தொண்டுகளைப் புரிந்து வந்தான்.  ஒருமுறை அவன் நலிவுற்ற நிலையில் தன்னுடைய தெய்வப் பணிகளுக்கென ஆற்றும் அறக் கட்டளைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆணை வழங்கினான். அதில் சிவபெருமான் இடைச் செருகலாக திருவொற்றியூர் நீங்கலாக என்று இருக்கக் கண்டு மன்னன் வியப்புற்றான்.  பின்னர் தான் உரைக்காதவற்றை இடைச் செருக்கலாகச் செய்தவர் யாவர் என அறிய முற்பட்ட நிலையில் அங்குள்ள நல்லமைச்சர் ஒருவரின் ஆலோசனைப்படி மன்னனும் திருவொற்றியூரை அடைந்து சில நாள் தங்கியிருந்து சிவபெருமானை வழிபடலானான்.  அவன் பிணி நீங்கிப் பூரண நலத்துடன் நாடு திரும்பினான். அத்தகைய சிறப்பு மிக்கதாக இத்திருத்தலம் விளங்குகிறது.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருப்பெயர் வடிவுடையம்மை என்பதாம்.  அம்பிகையைப் போற்றி வள்ளற்பெருமான் பாடிய வடிவுடை மாணிக்க மாலை தனிச் சிறப்புடையது.  இங்கு சுவாமி சந்நிதியில் மூலவர் ஆதிபுரீசுவரராக அக்கினி ரூபத்தில் அருவ நிலையில் உள்ளார்.  புற்று மண் வடிவத்தில் இலிங்க ரூபத்தில் தீண்டாத் திருமேனியாக விளங்கும் சிவபெருமானுக்குக் கவசம் கொண்டு மூடப்பட்டுள்ளது.  காத்திகை பெளர்ணமி தொடங்கி மூன்று நாள் கவசம் திறந்து புனுகு, சவ்வாது, சாம்பிராணி, தைலம் கொண்டு தரிசனம் தருவார். இந்த 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மெய்யன்பர் ஏலேலசிங்கருக்கு மாணிக்கங்கள் வழங்கி இறைவன் மாணிக்கத்தியாகர் எனப்பட்டான்.

திருத்தல வரலாறு : முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது, சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி, அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு 'ஒற்றியூர்' எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் 'ஒற்றீசர்' என அழைக்கப்பட்டு இத்தலம் 'ஒற்றியூர்' என அழைக்கப்பட்டது.

 பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும் பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் லிங்கத் திருமேனி புற்று மண்ணால் ஆனது.

கோவில் அமைப்பு : இந்த அலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது கிழக்கு சுற்று வெளிப்பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்பிரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். தலமரம் மகிழமரம். இந்த வடக்கு வெளிப்பிரகாரத்தில் தான் உள்ளது.

மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி அமைந்தள்ளது. சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம். வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர் கம்பர் இராமாயணம் எழுதியது இந்த திருவெற்றியூர் தலத்தில்தான். வட்டப்பாறை சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும். 27 நட்சத்திரங்கள் இங்கு வந்து நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தலவிருட்சம் அத்திமரம் மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : சென்னை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×