258. திருமுல்லைவாயில்





	


	



























	




 




	








 




3:22:45 PM         Tuesday, May 26, 2026

258. திருமுல்லைவாயில்

258. திருமுல்லைவாயில்
258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில் 258. திருமுல்லைவாயில்
Product Code: 258. திருமுல்லைவாயில்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை - ஆவடி சாலையில் இத்திருத்தலம் உள்ளது. இதனை வட திருமுல்லைவாயில் என்பர். சென்னை - ஆவடி புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பெருந்து வசதிகள் இருக்கின்றன. 

சுவாமி : மாசிலாமணீசுவரர்,  பாசுபதேசுவரர், நிர்மலமணீசுவரர்

அம்பிகை : கொடியிடை நாயகி, கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்

தலமரம் : முல்லை

தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்

பதிகம் : சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் பாலாற்றின் கிளை நதியொன்று இவ்வூர் வழியாகச் சென்றதாகத் திருமுறை நூலில் சாற்றப்படுகிறது. இங்கு நைமிசாரண்ய முனிவர்கள் பிருகு, சூரியன், இராமபிரான், துர்வாசர், ஐராவதம், இந்திராணி, கண்ணிபிரான், அர்ச்சுனன், நட்சத்திரங்கள் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இத்தலம் சுந்தரர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.

தொண்டை நாட்டு மன்னன் ஒருவனுக்கு சிவபெருமான் போர்த்துணையாக விளங்கி நந்திதேவரை அனுப்பியதாகப் புராண வரலாறு சாற்றும். இங்கு நந்திதேவர் கிழக்கு நோக்கியுள்ளமை தனிச்சிறப்பு. இறைவன் முல்லைக் கொடியை இடமாகக் கொண்டிருந்து வெளிப்பட்டமையால் இத்தலம் முல்லைவாயில் என்னும் பெயர் பெற்றது. இங்குக் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இரண்டு பெரிய வெள்ளெருக்குத் தூண்கள் உள்ளன. திருமால், முருகப் பெருமான், காமதேனு, வசிஷ்ட முனிவர் முதலியோர் பூசித்தபதி. இங்கு சுவாமிக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தலத்து அம்பிகையின் திருப்பெயர் கொடியிடை நாயகி. இங்குள்ள அம்பிகையை மாலையிலும் திருவொற்றியூரில் எழுந்தருளியுள்ள வடிவுடையம்மையை உச்சிப் போதிலும் , மேலூரில் விளங்கும் திருவுடை நாயகியைக் காலையிலும் தரிசித்தால் நன்மை கிட்டும் என்பது ஐதீகம்

திருமுல்லை என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தலவரலாறு : காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை அவனது எதிரி குறும்பர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைகை கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழிருந்து இரத்தம் வருவதை கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் குறும்பர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வென்று தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். குறும்பர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.

கோயில் அமைப்பு : தெற்கில் உள்ள ராஜகோபுரம் இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகும். தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைகடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும். 
 
வாளால் வெட்டப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.
 
தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நால்வர் திருஉருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பெளர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் முருகபெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும், தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன.

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார். இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை - பொன்னேரி பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்து கொடியிடை அம்மை - ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை. 

காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : திருமுல்லைவாயில்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×