259. திருவேற்காடு





	


	



























	




 




	








 




11:56:52 AM         Tuesday, May 26, 2026

259. திருவேற்காடு

259. திருவேற்காடு
259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு 259. திருவேற்காடு
Product Code: 259. திருவேற்காடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                             வேதபுரீஸ்வரர் கோவில், திருவேற்காடு

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் சென்னை சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் சென்னை சென்ட்ரல் - பூந்தமல்லி செல்லும் பாதையில் உள்ளது. பூந்தமல்லிக்கு முன்னதாக வலப்பக்கம் தனிப்பாதையில் செல்ல வேண்டும். திருவேற்காட்டுக்கு சென்னையிலிருந்து தனிப் பேருந்து செல்கிறது. இங்கிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் சிவாலயம் உள்ளது.

சுவாமி : வேற்காட்டுநாதர், வேதபுரீசுவரர்

அம்பிகை : வேற்கண்ணி,  பாலாம்பிகை

தலமரம் : வெள்வேல மரம்

தீர்த்தம் : வேலாயுதத் தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் உள்ள வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி ஈசனை வழிபட நோய் நீங்கும் என்று புராணம் கூறுகின்றது. இத்தலம் மூர்க்க நாயனார் திரு அவதாரத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.

சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதி அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியது. முருகப் பெருமான் வழிபட்ட தலம். இத்தலத்தில் நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று வழிபட்டதால் வேற்காடு எனப் பெயர் பெற்றது. ஒரு காலத்தில் வடக்கே இமயகிரியில் பார்வதி தேவியின் திருமணம் நடைபெறும் போது வாணவர் அனைவரும் ஒருங்கே கூடியதால் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகத்தியரை நோக்கி இப்பூமியைச் சமநிலைப் படுத்தும் வகையில் தெற்கு நோக்கிச் செல்லுமாறு பணித்தருளினார். அகத்திய முனிவர் தான் இறைவன் திருமணக் காட்சியைக் காண முடியாது என்று வருந்திக் கூற பெருமான் அத்திருக்காட்சியைக் காண அருள்புரிவதாகத் திருவாய் மலர்ந்தருளினார். அத்தன்மையில் இத்தலத்தில் சுவாமி சந்நிதியில் சிவபெருமானும், உமாதேவியும் திருமணக் கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்து அருளினார்.

கோயில் அமைப்பு : நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் 'வேற்காடு' என்று பெயர் பெற்றது. ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி காணலாம். மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும், அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக் கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

புராணச் செய்தி : இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிற்கு கட்டுப்படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.

பிரசித்திபெற்ற திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையி திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : சென்னை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×