261. திருவான்மியூர்





	


	



























	




 




	








 




4:05:18 AM         Monday, May 25, 2026

261. திருவான்மியூர்

261. திருவான்மியூர்
261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர் 261. திருவான்மியூர்
Product Code: 261. திருவான்மியூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                       மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் தென்பகுதியில் இத்தலம் உள்ளது.  திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சுவாமி : மருந்தீசர்,  பால்வண்ணநாதர், வேதபுரீசுவர்

அம்பிகை : திரிபுரசுந்தரி,  சொக்க நாயகி, சுந்தர நாயகி

தலமரம் : வன்னி

தீர்த்தம் : பாவ நாசினி

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,  திருஞானசம்பந்தர் - 2

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் வான்மீகி முனிவருக்கு இறைவன் திருநடனக் காட்சியருளினார். மேலும் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் மருந்து வகைகளைப் பற்றி அருளினார். இத்தலம் காமதேனு என்னும் பசு பால் சொரிந்து வழிபட்ட தலமாகவும், பாம்பன் சுவாமிகள் எனப்பெறும் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முத்தி பெற்ற தலமாகவும் விளங்குகிறது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் கொண்ட தலம் இது.

ஒருமுறை இப்பகுதியானது நீரால் சூழப்பட்டிருக்கும்போது அப்பைய தீட்சிதர் என்னும் அருளாளர்க்காக எளிதில் தரிசனம் தருதற் பொருட்டு மேற்கு நோக்கி திருக்காட்சி நல்கிய நிலையில் சுவாமி சந்நிதி மேற்கு நோக்கி உளளது. இங்கு சுப்பிரமண்யர் சந்நிதி, விஜய கணபதி சந்நிதி உள்ளன. அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இங்குள்ள சுக்கிரவார அம்மன் சந்நிதி தனிச் சிறப்பு. தியாகராஜர், நடராஜர் சந்நிதிகளும் உள்ளன. சுவாமிக்குப் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் முதலான அபிஷேகம் ஆவுடையாருக்கே உரியது.  அனுமன் பூசித்த லிங்கம், இந்திரனது சாபத்தைத் போக்கிய மீனாட்சி சுந்தரேசுவரர், பரத்துவாசர் பூசித்த லிங்கம் உள்ளன. முதற்கண் பிரம்மன் இத்தலப் பெருமானுக்கு விழா எடுத்தார். இங்கு ஜென்ம நாசினி, காம நாசினி, பாவ நாசினி, ஞானதாயினி, மோட்ச தாயினி என்னும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.

தலவரலாறு : கயிலை மலையில் சிவன், பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரைத் தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவபெருமானிடம் முறையிட, இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக்கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக்கோலத்தைக் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியால் அவதிபட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும் அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை. ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீகி முனிவரும் முக்தி பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலதம் வந்து இந்த வன்னி மரத்தடியில் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும் வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் இந்த வன்னிமரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : திருவான்மியூர்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×