265. திருஅச்சிறுபாக்கம்





	


	



























	




 




	








 




11:57:21 AM         Tuesday, May 26, 2026

265. திருஅச்சிறுபாக்கம்

265. திருஅச்சிறுபாக்கம்
265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம் 265. திருஅச்சிறுபாக்கம்
Product Code: 265. திருஅச்சிறுபாக்கம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                   ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம்

திருத்தல இருப்பிடம்:  இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்திலிருந்து தெற்கே 16 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக, திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் அச்சிறுப்பாக்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன.

1-வது சந்நிதி

சுவாமி : எமையாட்சீசர்

அம்பிகை : சுந்தர நாயகி, பாலாம்பிகை, இளங்கிளியம்மை


2-வது சந்நிதி

சுவாமி : உமையாட்சீசர்

அம்பிகை : மெல்லியலாள்

தலமரம் : சரக்கொன்றை

தீர்த்தம் : சங்கு தீர்த்தம், பானுதீர்த்தம், தேவ தீர்த்தம், சிம்ம தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: கண்ணுவ முனிவர், கௌதம முனிவர் பூசித்த பதி. இத்தலத்திற்குப் பக்கத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் தனிச் சிறப்புடன் விளங்குகின்றது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். இத்தலம் தற்போது அச்சரப்பாக்கம் என வழங்கப்படுகிறது.

திரிபுரத்தை எரித்ததற்கு பெருமான் தேரில் சென்ற போது விநாயகரை நினையாமையால் அச்சு முறிந்தது எனவும் அதனால் அச்சுஇறுபாக்கம் எனப் பெயர் கொண்டது எனவும் சொல்லப்படுகிறது. தேர் வடிவத்தில் இருக்கும் தேவர்கள் இறைவனுக்குத் தாம் துணை செய்தலை எண்ணி அகந்தையுற இறைவன் தேரின் அச்சு ஒடியுமாறு செய்தருளினார் எனவும் உரைக்கப்படுகிறது. கங்கையிலிருந்து திருப்பணிக்கு மணல் கொண்டு வரும்போது வண்டிகளின் அச்சு முறிந்தமையால்  இப்பெயர் பெற்றது எனவும் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு: இவ்வாலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.

உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான். முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : அச்சிறுப்பாக்கம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×